We meet on every II & IV Wednesday






சிவகாசி லயன்ஸ் சங்கம்

'சாதனை சரித்தரம் படைக்க தொடரும் பாரம்பரியம்''



- லயன் S. கிருஷ்ணமூர்த்தி MJF



உழைப்பின் திறன் பெற்று, எங்கு நோக்கினும் தொழில் வளத்தால் எழில் பெற்று குட்டி ஜப்பான் என்று புகழ் பெற்று விளங்கும் சிவகாசி. “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற ஆன்றோர் வாக்கை மெய்யாக்கி சமுதாய சேவையில் முதன்மை இடம் வகிக்கிறது, சிவகாசி லயன்ஸ் சங்கம். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் முதுமொழிக்கிணங்க தொண்டு இயக்கமாகிய சிவகாசி லயன்ஸ் சங்கம் கல்வி, சமுதாயம், கிராமப்புற வளர்ச்சி, ஊனமுற்றோர் நலம், நிரந்திர திட்டப்பணிகள் என தலையாய தொண்டுகளால் நிலையான புகழ் பெற்று திகழ்கின்றது.

உலகயுத்தத்தின் உக்கிரத்தில் பாரெங்கும் அமைதியைத் தேடிய காலகட்டத்தில் நம் லயன்ஸ் இயக்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்கள் 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ம் தேதி லயன்ஸ் இயக்கமென்ற மிகப்பெரிய மாளிகை உருவாக அஸ்திவாரக்கல்லினை இட்டார். அது விரைவிலேயே உலகெங்கிலுமுள்ள 67 நாடுகளில் பரவி அங்கம் வகித்தது. 1956ம் ஆண்டு நம் இந்திய நாட்டிலும் காலூன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி முறைப்படி துவக்கி வைக்கப்பட்ட முதல் லயன்ஸ் சங்கம் - டில்லி லயன்ஸ் சங்கம். துவக்கப்பட்ட 3வது நாளிலேயே தன் பட்டயத்தை பெற்றது. அன்று லயன்ஸ் மாவட்டம் 304ல் இணைக்கப்பட்டது.

பின் மூன்று ஆண்டிற்குள் 4 லயன்ஸ் மாவட்டங்களாக உருவானது. நம் இந்திய மண்ணில் லயன்ஸ் இயக்கம் காலூன்றிய 5 ஆண்டுகளில் - மே மாதம் 9ம் தேதி 1961ம் ஆண்டு திருநெல்வேலி லயன்ஸ் சங்கத்தால் சிவகாசி லயன்ஸ் சங்கம் துவக்கி வைக்கப்பட்டது. 304-S மாவட்ட ஆளுநர் மதுரை, லயன் டி. சுந்தரம் செட்டியார் அவர்கள் முன்னிலையில் பன்னாட்டு லயன்ஸ் இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர் லயன் நோசிர் N. பண்டோல் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. லயன்ஸ் மாவட்டம் 304-S, அன்று 32 சங்கங்களை (தமிழ்நாடு - 13, கர்நாடகம் - 10, கேரளம் - 4, ஆந்திரா - 4, இலங்கை - 1) கொண்டிருந்தது.

சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் பட்டயத்தலைவராக லயன் I.N. மூர்த்தி அவர்கள் பதவி ஏற்றார்கள். பட்டய உறுப்பினர்கள் மொத்தம் 28 லயன்ஸ். உலகிலுள்ள 125 நாடுகளில் 17,664 சங்கங்களின் 6,74,338 உறுப்பினர்களுடன் இணைந்து லயன்ஸ் சேவைகள் செய்திட சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் 28 பட்டய உறுப்பினர்களும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பட்டயம் டிசம்பர் 3ம் தேதி 1961ம் ஆண்டு வழங்கப்பட்டது. பட்டயச் செயலாளர் லயன் N.P.S.S. நடராஜ நாடார் அவர்களும் பட்டய பொருளாளராக லயன் A. வைரப்பிரகாசம் அவர்களும் பணியேற்று சிவகாசி லயன்ஸ் சங்கத்திற்கு ஓர் சிறப்பான துவக்கத்தை அளித்தார்கள். பட்டயமளிப்புவிழா அன்றைய மாவட்ட ஆளுநர் லயன் டி. சுந்தரம் அவர்கள் தலைமையில் பன்னாட்டு லயன்ஸ் இயக்க ஆசிய செயலாளர் லயன் N. பண்டோல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட அமைச்சரவை பொருளாளர் மற்றும் அன்று மதுரை ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் லயன் டாக்டர் T.V. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அன்றைய திருநெல்வேலி லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் லயன் A. அருணகிரி அவர்கள் நம் சங்க உருவாக்கத்திற்கு பெரிதும் உதவினார்கள். அன்றைய பட்டய உறுப்பினர்களில் லயன் A. வைரப்பிரகாசம், இன்றும் சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் பட்டய உறுப்பினராக தொடர்ந்து லயன்ஸ் பணியாற்றி வருகின்றார்.

லயன்ஸ் ஆண்டு 1961-62ல் லயன் வி. பங்காருசாமி அவர்கள் (Superindent of Central Excise) சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பட்டய செயலாளர் லயன் N.P.S.S. நடராஜ நாடார் அவர்களே அந்தாண்டு சங்கச்செயலாளராக பணியாற்றினார்கள். லயன் A. வைரப்பிரகாசம் அவர்களே மறுபடியும் பொருளாளர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றினார்கள். அந்த ஆண்டு 322 ஏழை மாணவர்களுக்கு பள்ளிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்கப்பட்டது. சிவகாசி நகரில் 4 நுழைவு வாயில்களிலும் வரவேற்பு பலகை அமைக்கப்பட்டது. மாவட்ட மாநாடு பெங்களூரில் நடைபெற்றது.

லயன்ஸ் ஆண்டு 1962-63ல் நம் சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் லயன் N.P.S.S. நடராஜ நாடார். அவருக்குச் செயலாளர் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள். பொருளாளர் லயன் Dr. K.C. நடராஜன் அவர்கள். பார்வையற்றோர் பள்ளிக்கு படுக்கைகள், உபகரணங்கள் மற்றும் நிதியுதவி, அரசு மருத்துவமனைக்கு உதவி, பள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவி என சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த ஆண்டு மாவட்ட ஆளுநர் லயன் M.R. சாஸ்திரி அவர்கள். கொச்சியில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முதன்முறையாக போட்டியிட்டு ஆளுநராக தேர்வு பெற்றவர் லயன் M.R. சாஸ்திரி அவர்கள்.

1963, டிசம்பர் 1ம் தேதி நமது சங்கத்தின் இரண்டாவது பட்டய இரவு கொண்டாட்டம் மாவட்ட நீதிபதி ஜனாப் சையது இப்ராகிம் எம்.ஏ. பி.எல் அவர்களை சிறப்பு விருந்தினராகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது. அதற்கென ஒரு சிறப்பு மலர் (Souvenir) அச்சிட்டு வெளியிடப்பட்டது. நமது சங்கத்தின் முதலாவது சங்கமலரும் அதுதான். அதில் அன்றைய பன்னாட்டு லயன் இயக்கத்தின் தலைவர் லயன் ஆஃப்ரே டி. கிரீன், பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் ஆசிய தலைமையக செயலாளர் லயன் N. பண்டோல், மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர். T.V. வெங்கடேசன் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல பெரியோர்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. பட்டய உறுப்பினர்களின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டன. அன்றைய பட்டய தின விழாவிலே நடத்தப்பட்ட சேவைத்திட்டங்களுக்கான புகைப்படங்கள், கலை நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் நம் சங்கம் நம் நகர் பொருட்காட்சியில் நடத்திய மருத்துவ முகாம் புகைப்படங்கள் என அச்சிட்டு சிறப்பு மலராக வெளி வந்தது.

லயன்ஸ் ஆண்டு 1963-64ம் ஆண்டிலும் தலைவர் லயன் N.P.S.S. நடராஜ நாடார், செயலராக லயன் N.R.K.R. ரவீந்திரன், பொருளாளராக லயன் P. பால்ராஜன் ஆகியோர் பணியாற்றினர். நகர் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. லயன்ஸ் பள்ளிக்கு பணம் உதவி வழங்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் லயன் Dr.T.V. வெங்கடேசன். மாவட்ட மாநாடு ஊட்டியில் நடைபெற்றது. நமது சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மாவட்டத்தின் வட்டாரத் தலைவராகவும் இரண்டு முறை பணியாற்றியவர் லயன் N.P.S.S. நடராஜ நாடார் அவர்கள் ஒருவர் மட்டுமே என்பது சிறப்பு. இந்த ஆண்டும் நகரின் பொருட்காட்சியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 1964-65ல் நம் லயன்ஸ் சங்கத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் லயன் E.A.E.T. சுந்தரராஜன் அவர்கள், செயலர் லயன் K.R. பாலசந்திரன், பொருளாளர் லயன் V.S.T குமாரசாமி அவர்கள். லயன் N.P.S.S. நடராஜ நாடார் அவர்கள் மாவட்ட அமைச்சரவையில் முதன்முதலில் நம் சங்கத்தின் சார்பில் வட்டாரத்தலைவராக பதவியேற்றார்கள். அந்த ஆண்டு மாவட்ட ஆளுநர் பாலக்காட்டைச் சேர்ந்த லயன் Dr.A.K. ஹரிதாஸ் அவர்கள். அன்றைய கூட்டு மாவட்டம் 304ன் தலைவரும் இவரே. அந்த ஆண்டும் மாவட்ட மாநாடு ஊட்டியில் நடைபெற்றது.

1965-66ம் லயன்ஸ் ஆண்டு நம் சங்கத்தின் தலைவர் L.St லட்சுமணன் (சிவகாசி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனேஜர்) செயலாளர் லயன் G. கணேசன், பொருளாளர் லயன் S.K.D ரத்தினம். குடிநீர் வழங்கிட, சங்கம் பெரிதும் சேவை செய்தது. மாவட்ட ஆளுநர் சென்னையைச் சேர்ந்த லயன் M.H. காசிம் சேட். மாவட்ட மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடும் கேரளாவும் இணைந்து 304-S1 என்ற புதிய மாவட்டம் உதயமாகியது.

1966-67ம் லயன்ஸ் ஆண்டு சிவகாசி லயன் சங்கத்திற்கு லயன் D. சிவபிரசாத் B.E., A.M.I.E (Inspector of Explosives) தலைவராகவும், லயன் P. பால்ராஜன் செயலாளராகவும், லயன் S. சந்திரசேகரன் பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர் லயன் N.P.S.S. நடராஜ நாடார் அவர்கள் மாவட்ட அமைச்சரவையில் வட்டாரத் தலைவராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்கள். அந்த ஆண்டு மாவட்ட ஆளுநர் லயன் ஜஸ்டிஸ் கோவிந்த மேனன். அந்த ஆண்டு மாவட்ட மாநாட்டில் Election Committee உறுப்பினராகவும் லயன் N.P.S.S. நடராஜ நாடார் அவர்கள் செயல்பட்டார்கள். மாவட்ட மாநாடு திருவனந்தபுரம் நகரில் நடைபெற்றது.

லயன்ஸ் ஆண்டு 1967-68ல் சங்கத் தலைவராக லயன் K.A.A.அருணாசலம் அவர்களும், செயலாளராக லயன் D. ராஜாபால் அவர்களும், பொருளாளராக லயன் G. கணேசன் அவர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பின் ஒரு சில மாதங்களில் லயன் G. கணேசன் அவர்களே தலைமை பொறுப்பை ஏற்று செயல்பட்டார்கள். 1967 நவம்பர் மாதம் 25ம் தேதி மாவட்ட ஆளுநர் லயன் G.K தாமோதர் ராவ், சென்னை அவர்களால் நம் லயன்ஸ் பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. லயன் G. கணேசன், லயன் டி. ராஜாபால், லயன் K.A.A.அருணாசலம் லயன் E.A.E.T சுந்தரராஜன் ஆகியோர்களை குழுவாகக் கொண்டு 1968ம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு சிறப்பு சங்க மலர் வெளியிடப்பட்டது.

இது நமது சங்கத்தின் இரண்டாவது சங்க மலர். சிவகாசி லயன்ஸ் சிறுவர் பள்ளியின் தொடக்க விழாவினை நினைவாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அன்றைய இந்திய ஜனாதிபதி மதிப்பிற்குரிய ஜாகீர் ஹுசேன் அவர்கள் சார்பாக அவரது செயலாளர் உயர்திரு நாகேந்திர சிங் அவர்களும், துணை ஜனாதிபதி மதிப்பிற்குரிய வி.வி.கிரி, இந்திய பிரதமர் சார்பில் அவரது ஆலோசகர் H.Y சாரதா பிரசாத், தமிழக முதலமைச்சர் உயர்திரு C.N அண்ணாத்துரை, பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தலைவர் லயன் ஜார்ஜ்பேர்ட், தென்மேற்கு ஆசிய லயன்ஸ் தலைமைச்செயலகத்தின் செயலாளர் மினு ஜே.டி. எஞ்சினியர், பன்னாட்டு நிர்வாகக்குழு முன்னாள் உறுப்பினர் லயன் நோகிர் N. பண்டோல் மற்றும் துணை மாவட்ட ஆளுநர், வட்டாரத்தலைவர் ஆகியோரின் வாழ்த்துரைகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெற்றன. அந்த ஆண்டு உறுப்பினர் எண்ணிக்கை 37. நம் லயன்ஸ் பள்ளியின் தலைவர் லயன் N.R.K.R ரவீந்திரன், பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் லயன் G. கணேசன் அவர்கள். பொருளாளர் லயன் K.A.A. அருணாசலம். 10 லயன்ஸ்கள் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் செயல்பட்டனர். பள்ளியின் முதல்வர் செல்வி எபனேசர் சாமுவேல் அவர்கள். அந்த ஆண்டு மாவட்ட மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது.

லயன்ஸ் ஆண்டு 1968-69ல் நம் சங்கத்தலைவர் லயன் Dr. D.K ஜெயபால்ராஜ், சங்க செயலர் லயன் R. ஜெகதீச சங்கர், பொருளாளர் லயன் K.R பாலசந்திரன். அந்த ஆண்டு நம் சங்கத்தின் சேவைத்திட்டங்கள் நம் லயன்ஸ் பள்ளிக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் லயன் P.S. ஆபிரகாம். மாவட்ட மாநாடு சேலம் நகரில் நடைபெற்றது.

லயன்ஸ் ஆண்டு 1969-70ல் சங்கத்தலைவராக லயன் G.J. தேவதாசன் M.A.LT. (Principal Ayyanadar Janakiammal College). லயன் N. சசீந்திரன் செயலராகவும் லயன் A.P. முருகேசன் பொருளாளராகவும் பணியாற்றினார்கள். மாவட்ட அமைச்சரவையில் லயன் E.A.E.T. சுந்தரராஜன் அவர்கள் வட்டாரத்தலைவராக பணியாற்றினார்கள். நமது சங்கத்தின் வட்டாரத்தலைவர் பொறுப்பேற்ற இரண்டாவது லயன் அவர். மாவட்ட ஆளுநர் சென்னையைச் சேர்ந்த லயன் K.R. சுந்தரராஜன். இவருடைய பதவிக்காலத்தில் மாவட்டத்தில் 22 புதிய சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த ஆண்டு கேரளாவின் கோழிக்கோட்டில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதன் பின் கேரளம் 304- S3 என தனி மாவட்டமாக பிரிந்தது.

லயன்ஸ் ஆண்டு 1970 - 71ல் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் நம் சங்கத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். செயலாளர் லயன் K.R பாலசந்திரன். பொருளாளர் லயன் A.P முருகேசன். இந்த ஆண்டு லயன்ஸ் பள்ளியின் பெரிய கட்டிடத்திற்கு பாரத ரத்னா திரு. K. காமராஜர் M.P. அவர்கள் 6-4-1970ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதற்கு இடம் பழனியாண்டவர் இளைஞர் விளையாட்டுக்கழகம் 14 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. நம் லயன்ஸ் பள்ளி நம் சங்கத்தின் நிரந்திர திட்டம். அதற்கு வித்திட்ட நம் லயன்ஸ் முன்னோடிகளை என்றென்றும் மனதார பாராட்டுவோம். வணங்குவோம். கோயம்புத்தூர் லயன் Dr. S.G. ராஜரத்தினம் அவர்கள் மாவட்ட ஆளுநர். இந்த ஆண்டுதான் தமிழ்மொழி முதன்முறையாக லயன்ஸ் சங்கங்களில் பயன்படுத்தப்பட்டது, மாவட்ட மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது.

1971-72 லயன்ஸ் ஆண்டில் நம் சங்கத்தலைவர் லயன் M.E. தனுகா, செயலாளர் லயன் K.S.A. ஜெயபால், பொருளாளர் லயன் M.A. நாராயணசாமி. இலவச மருத்துவமுகாம்கள், குடிநீர் தொட்டிகள் மற்றும் கல்வி நிதியுதவி என பல சேவைத்திட்டங்கள் செய்யப்பட்டன. மாவட்ட ஆளுநர் லயன் S. வாசுதேவன் ஸ்ரீரங்கம் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர். மாவட்ட மாநாடு முதன் முதல் மதுரையில் நடைபெற்றது.

லயன்ஸ் ஆண்டு 1972-73ல் நம் சங்கத்தலைமை பொறுப்பை ஏற்றவர், லயன் ஞானகிரி கணேசன் அவர்கள். லயன் D. ராஜாபால் செயலராகவும் லயன் N.S.M. சங்கரபாண்டியன் அவர்கள் பொருளாளராகவும் பதவி வகித்தனர். சிவகாசியிலுள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆளுநரின் அனைத்து திட்டங்களும் முழுமையாக செயலாக்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் சென்னையைச் சேர்ந்த லயன் M. சங்கரன் அவர்கள். இவர் 304-S1 மாவட்டத்தின் கடைசி ஆளுநர். சென்னையில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

1973-74 லயன்ஸ் ஆண்டில் நம் சங்கத்தலைவர் லயன் R.ஜெகதீசசங்கர் அவர்கள். செயலாளர் லயன் M.A. நாராயணசாமி அவர்கள். பொருளாளர் லயன் N.S.M. சங்கரபாண்டியன் அவர்கள் இரண்டாவது முறையாக பணியாற்றினார்கள். 304 கூட்டு மாவட்டம் (இந்தியா முழுவதும் அடங்கியது) நான்காகப் பிரிக்கப்பட்டது. 321, 322, 323 மற்றும் 324 என புதிய கூட்டு மாவட்டங்கள் உருவானது. நமது சங்கம் 324 கூட்டுமாவட்டத்தின் 324-B மாவட்டத்தில் இணைந்தது. 324 கூட்டு மாவட்டத்தின் முதல் கூட்டு மாவட்டத்தலைவர் ஈரோடு, லயன் K. சின்னச்சாமி அவர்கள். இவரே நம் 324-B மாவட்ட ஆளுநர். மாவட்ட மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்றது.

1974-75 லயன்ஸ் ஆண்டில் நம் சங்கத்தலைவர் லயன் S.K.D. ரத்தினம் அவர்கள். செயலாளர் லயன் S.P. கணேசன். பொருளாளர் லயன் S. சந்திரசேகரன் அவர்கள். நம் லயன்ஸ் பள்ளிக்கு வேண்டிய நிதி உதவி வழங்கப்பட்டது. நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க குடிதண்ணீர் வழங்கப்பட்டது. நிரந்தர திட்டமாக பயணிகள் நிழற்கூடம் கட்டி அர்ப்பணிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் மதுரை நகர் லயன்ஸ் சங்கத்தின் லயன் P. ஜெகதீசன் அவர்கள். மாவட்ட மாநாடு இரண்டாவது முறையாக மதுரையில் நடைபெற்றது.

1975-76 லயன்ஸ் ஆண்டில் நம் சங்கத்தலைவராக K.S.S.P. தனசேகரன் அவர்களும் அவருக்கு செயலாளராக லயன் A.R. சங்கரேஸ்வரன் அவர்களும் பொருளாளராக லயன் K.A.P.A. ராஜசேகரன் அவர்களும் பணியாற்றினார்கள். நம் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 36. சங்கத்தின் சேவைத்திட்டங்கள் - நம் லயன்ஸ் பள்ளிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடைபெற்றன. மாவட்ட ஆளுநர் சேலம் லயன் J. சுகவனம் அவர்கள். மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது.

1976-77 லயன்ஸ் ஆண்டு நம் சங்கத்தலைவர் லயன் A.R சங்கரேஸ்வரன் அவர்கள். செயலாளர் லயன் L. பழனிச்சாமி. பொருளாளர் லயன் S.P. பிரேம்குமார். மாவட்ட ஆளுநர் மதுரை லயன் N.M.R.V. சிவப்பிரசாத் அவர்கள். நம் சங்கத்தின் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் வட்டாரத்தலைவராக செயலாற்றினார். அன்று நம் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 44. மாவட்ட மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

1977-78 லயன்ஸ் ஆண்டில் நம் சங்கத்தலைவர் லயன் S. சந்திரசேகரன் அவர்கள். செயலாளர் லயன் விஜயகுமார். பொருளாளர் லயன் A.S. ஆறுமுகச்சாமி. மாவட்ட ஆளுநர் திருப்பூர் லயன் K. ராமசாமி அவர்கள். இந்த ஆண்டு Lion Ladies Auxiliiary Club நம் சிவகாசி லயன் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவி மீரா வைரப்பிரகாசம் அவர்கள். அந்த ஒரு ஆண்டு மட்டுமே செயல்பட்ட Lion Ladies Auxiliary Club, அடுத்த ஆண்டு சிவகாசி லயன்ஸ் மகளிர் சங்கமாக செயல்பட்டது.

1978-79 லயன்ஸ் ஆண்டில் நம் சங்கத்தலைவர் லயன் L. பழனிச்சாமி அவர்கள். செயலாளர் லயன் A. தனபாலன், பொருளாளர் லயன் A.M.S.G. ராமமூர்த்தி. வடமலாபுரத்தில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. கல்விச் சேவைகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் விருதுநகர் லயன் T. முத்துச்சாமி அவர்கள். லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் இந்த ஆண்டு துணை ஆளுநராக பணியாற்றினார்கள். சிவகாசியில் மண்டல மாநாடு சிறப்பாக நடைபெற்றது. புதியதாக ஆரம்பிக்கப்பட்ட லயன்ஸ் மகளிர் சங்கத்தின் தலைவியாக லயன் மகளிர் பிரேமாவதி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். லயன்ஸ் மகளிர்சங்கம் பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் பொம்மைகள் வழங்கி சேவை செய்தது.

லயன்ஸ் ஆண்டு 1979-80ல் நம் சங்கத்தலைமை பொறுப்பை லயன் K.S.A. ஜெயபால் அவர்களும் அவருக்கு செயலாளராக லயன் S. சுபாஷ்சிங் இந்தியாராஜன் அவர்களும் பொருளாளராக லயன் V.C. சிங்வி அவர்களும் பணியாற்றினார்கள். உறுப்பினர் எண்ணிக்கை 67. லயன்ஸ் மகளிர் சங்கத்தலைவி ஜோதிபாய் ஜெயபால். செயலாளர் ஹேமா சுபாசிங் அவர்களும், பொருளாளராக சந்துசிங்வி அவர்களும் பணியாற்றினார்கள். 21 லயன்ஸ் மகளிர்களை உறுப்பினர்களாக கொண்டு லயன்ஸ் மகளிர் சங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் சேலம் லயன் லட்சுமணலால் பதீஜா. பொருளாளர் சந்து சிங்வி அவர்களும் பணியாற்றினர். முதன் முறையாக இந்த ஆண்டு Ladies Night நிகழ்ச்சி ஆட்டம் பாட்டு கொண்டாட்டத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய சேவைத்திட்டமாக ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது.

1980-81 லயன்ஸ் ஆண்டு நம் சங்கத்தலைவர் லயன் A. தனபாலன் அவர்கள் செயலாளராக லயன் A. ஆறுமுகச்சாமி அவர்களும் பொருளாளராக லயன் A.C. கனகசபை அவர்களும் பணியாற்றினார்கள். அந்த ஆண்டு சங்க உறுப்பினர் எண்ணிக்கை 82. மாவட்ட ஆளுநர் திருநெல்வேலியை சேர்ந்த லயன் S. ரத்தினம் அவர்கள். லயன் S.K.D. ரத்தினம் அவர்களை வட்டாரத்தலைவராக நியமித்தார்கள். லயன்ஸ் மகளிர் சங்கத்தலைவி சுசிலா தனபாலன் அவர்கள், செயலர் கஸ்தூரி ஆறுமுகச்சாமி, பொருளாளர் சித்திரலேகா கனகசபை. இந்த ஆண்டு நம் இந்தியாவில் லயன்ஸ் இயக்கத்திற்கு வெள்ளிவிழா (25) ஆண்டு. நம் லயன்ஸ் சங்கமும் லயன்ஸ் மகளிர் சங்கமும் மாரனேரி கிராமத்தை தத்து எடுத்து பல சேவைகள் செய்யப்பட்டன. ஆரோக்கிய குழந்தை போட்டி நடைபெற்று பெயர் பெற்றது. நமது சங்கம் “The Jewel” என்ற மாதாந்திர இதழை லயன் சிதம்பர நடராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு முதன்முதலில் 10 இதழ்கள் வெளியிட்டது. மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது.

லயன் என்.எஸ்.எம். சங்கரபாண்டியன் அவர்கள் 1981- 82ல் தலைவராக பொறுப்பேற்றார்கள். அவருக்கு கே. அம்புலிராஜன் அவர்கள் செயலாளராக செயல்பட்டார்கள். பொருளாளர் லயன் A.M.S.G. அசோகன். லயன்ஸ் சங்கம் அந்த ஆண்டு ஒரு இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளிக்குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது. இலவச நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு முகாமும் நடத்தப்பட்டது. அய்யனார் காலனியில் ஒரு மிகப்பெரிய இலவச மருத்துவமுகாமும் நடத்தப்பட்டது. ஒரு உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு 3 சக்கர வண்டி இலவசமாக வழங்கப்பட்டது. அந்த ஆண்டு நம் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 97. லயன் கே.எஸ்.எஸ்.பி. தனசேகரன் அவர்கள் வட்டாரத்தலைவராக ஆளுநர் ஆர். சங்கர் (திண்டுக்கல்) அவர்களின் மாவட்ட அமைச்சரவையில் செயல்பட்டார்கள். அவரது வட்டாரத்தில் சிவகாசி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய மூன்று சங்கங்கள் அங்கம் வகித்தன. அவர் நமது சங்கத்தின் 5வது வட்டாரத்தலைவர். மேலும் லயன் S.K.D. ரத்தினம் அவர்கள் மாவட்டத்தலைவர் (Aid To Unemployed) லயன் A.R. சங்கரேஸ்வரன் அவர்கள் மாவட்டத்தலைவர் (Scouts and Guides) என்றும் மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள். நம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஒருவருக்கு மேல் மாவட்ட அமைச்சரவையிலே இடம் பெறுவது அந்த ஆண்டு தான் முதன் முறையாகும். அந்த ஆண்டு நம் சங்கத்தின் சார்பில் லயன் A. வைரப்பிரகாசம் அவர்களை மாவட்ட ஆளுநர் பதவிக்கு போட்டியிட நமது சங்கம் முன்மொழிந்தது. அதற்கென நம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட்டார்கள். அந்த ஆண்டு மாவட்ட மாநாடு ஊட்டியில் நடைபெற்றது. ஒரு சில வோட்டுகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றிவாய்ப்பினை இழந்தாலும், அதுவே நம் வெற்றிக்கு முதற்படி என நம் சிவகாசி லயன்ஸ் சங்கம், அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டு ஆளுநர் போட்டியில் வெற்றிபெற்றிட முழு முயற்சி மேற்கொள்ள முடிவு கொண்டது.

1982-83ம் ஆண்டிலே லயன் C. சுபாஸ்சிங் இந்தியாராஜன் அவர்கள் தலைவராகவும் அவருக்கு செயலாளராக G. ராமமூர்த்தி அவர்களும், பொருளாளராக லயன் A.N. ராமசாமி அவர்களும் செயலாற்றினார்கள். அந்த ஆண்டு உறுப்பினர் எண்ணிக்கை 106. நமது சங்கத்தின் சார்பில் லயன்

A. வைரப்பிரகாசம் அவர்கள் ஆளுநர் எம். தங்கவேலு (நீலகிரி) அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள். அவருக்கு மாவட்டத் தலைவர் (Rural Development & Cottage Industries) என்ற துறை வழங்கப்பட்டது.

லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் மாவட்டத்தலைவர் என்ற முறையில் இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாவட்ட அளவிலான கருத்தரங்கம் ஒன்றினை நடத்தினார்கள். மாவட்டமே வியந்து, அவரை பாராட்டியது. அந்த ஆண்டு மாவட்ட மகாநாடு சேலம் நகரிலே நடைபெற்றது. அங்கு நடந்த மாவட்ட ஆளுநருக்கான போட்டியில் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் ஆளுநராக தேர்வு பெற்றார்கள். சிவகாசி நகருக்கே முதன் முறையாக ஒரு பெருமையைச் சேர்த்தது நம் லயன்ஸ் சங்கம்.

லயன்ஸ் மகளிர் சங்கத்தலைவியாக லயன் மகளிர் ஹேமா சுபாஸ்சிங் அவர்களும், செயலாளராக லயன் மகளிர் பிரேமலதா ராமமூர்த்தி அவர்களும் பொருளாளராக லயன் மகளிர் சந்து சிங்வி அவர்களும் சிறப்பாக செயலாற்றினார்கள். இந்த ஆண்டு நம் சிவகாசி லயன்ஸ் சங்கம் சிவகாசி வர்த்தக மேம்பாட்டுக்கழகம் கட்டிடத்தில் நடத்திய நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை முகாம் ஊரெங்கும் பாராட்டுப்பெற்றது. பள்ளி சிறுவர்களுக்கு மருத்துவ மற்றும் கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. ஒரு உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு மூன்று சக்கர வண்டியும் வழங்கப்பட்டது.

1983-84ம் ஆண்டு நம் சிவகாசி லயன்ஸ் சங்கத்திற்கு அதன் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு. லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாவட்டத்தின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற அகில உலக லயன்ஸ் மாநாட்டிலே ஆளுநராக பதவி ஏற்றார்கள். நமது மாவட்ட அமைச்சரவை பதவி விழாவினை மாவட்டமே வியக்கும் வண்ணம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய பந்தலிட்டு சிறப்பாக நம் லயன்ஸ் சங்கம் நடத்தப்பட்டது.

லயன் K.S.S.P. தனசேகரன் தலைமையில் 8 லயன்ஸ்கள் கொண்ட மாவட்ட கையேட்டுக்குழு நமது மாவட்டத்திற்கு முதன்முறையாக ஆப்செட் அச்சு முறையில் மாவட்ட கையேட்டினை இலவசமாக அச்சிட்டு வழங்கி பெருமை சேர்த்தது. லயன் A. வைரப்பிரகாசம் அவர்களுக்கு மாவட்ட அமைச்சரவை செயலாளராக லயன் A. தனபாலன் அவர்களும், அமைச்சரவை பொருளாளராக லயன் S. சந்திரசேகரன் அவர்களும், அமைச்சரவை இணைச் செயலாளராக லயன் L. பழனிச்சாமி அவர்களும் பணியாற்றினார்கள். லயன் K.S.S.P.தனசேகரன் அவர்கள் மாவட்டத்தலைவர் - லயன்ஸ் மகளிர் சங்கம், லயன் A.R. சங்கரேஸ்வரன் அவர்கள் மாவட்டத்தலைவர் Club Supplies என மாவட்ட அமைச்சரவையில் உடன் பணியாற்றினார்கள்

அந்த ஆண்டு நம் சங்கத்தின் தலைவர் லயன் C. கனகசபை. செயலாளர் லயன் R. சந்திரபிரகாஷ். பொருளாளர் லயன் R. அசோக்குமார். சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 106. நமது சங்கம் அந்த ஆண்டு பேருந்து பயணிகள் தங்குமிடம் இரண்டு, காரனேசன் காலனியில் கட்டிக்கொடுத்தது. இன்னும் எண்ணற்ற சேவைத்திட்டங்களை நிறைவேற்றியது. ஆளுநர் லயன் A. வைரப்பிரகாசம் அவர்களின் சிறப்பான செயலாக்கத்தைப் பாராட்டி பன்னாட்டு லயன் சங்கம் அவருக்கு 100% மாவட்ட ஆளுநர் விருதினை அளித்து கௌரவித்தது. இன்னும் பன்னாட்டு லயன் விருதுகள் பல பெற்று அவர்கள் பாராட்டப்பட்டது, நம் சங்கத்திற்கு கிடைத்த அரிய பெருமைகளாகும்.

நம் லயன்ஸ் மகளிர் சங்கம் லயன் மகளிர் சித்ரலேகா கனகசபை அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. அந்த ஆண்டு நமது மகளிர் சங்கம் சார்பில் அறுசுவை விருந்து என்ற சமையல் புத்தகம் நமது லயன்ஸ் மகளிர்களால் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் ரூ.10,000/- நிதி திரட்டப்பட்டு பள்ளி மாணவியர்கள் கல்விக்காக உதவிகள் செய்திட நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் சேமித்து வைக்கப்பட்டது. அந்த தொகையின் மூலம் வரும் வட்டித் தொகை கல்விச் சேவைக்காக வருடம் தோறும் செலவளிக்கப்பட்டது.

நமது சிவகாசி லயன்ஸ் சங்கம் 1983-84ம் ஆண்டிலே, முதன் முறையாக திருத்தங்கல்லில் புதிய லயன்ஸ் சங்கத்தினை திருத்தங்கல் லயன்ஸ் சங்கம் என உருவாக்கியது. லயன் A.S. ராஜப்பன் அவர்கள் பட்டயத்தலைவராக பொறுப்பேற்றார். 10-08-1983ம் நாள் திருத்தங்கல் லயன்ஸ் சங்கத்தை அன்றைய ஆளுநர் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அப்புதிய திருத்தங்கல் சங்கத்தின் வழிகாட்டி லயன் நம் சங்க முன்னாள் தலைவர் லயன் A.M.S.G. ராமமூர்த்தி ஆவார்.

பின் மீண்டும் 17-11-83ல் மற்றுமொரு புதிய சங்கத்தினை நம் சிவகாசி லயன்ஸ் சங்கம் சார்பில் சாத்தூரிலே துவக்கி வைத்தோம். அதன் பட்டயத்தலைவர் லயன் R. பழனிச்சாமி ஆவார்கள். இப்புதிய சாத்தூர் லயன்ஸ் சங்கத்தையும் ஆளுநர் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். நம் சங்கத்தின் லயன் K.S.S.P தனசேகரன் வழிகாட்டி லயனாக செயல்பட்டார்கள்.

1984-85ம் ஆண்டு லயன் A.S. ஆறுமுகச்சாமி அவர்கள் நம் சங்க தலைவராகவும் அவருக்கு செயலாளராக லயன் G.D. நடராஜ்பிரபு அவர்களும், பொருளாளராக லயன் M.A.P. சேர்மராஜ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்கள். ஆளுநர் M. பெரியசாமி (ஈரோடு) அவர்களின் மாவட்ட அமைச்சரவையிலே லயன் L. பழனிச்சாமி வட்டாரத் தலைவராகவும், லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் மாவட்டத்தலைவர் Honourary Commitee, லயன் ஏ. தனபாலன் அவர்கள் மாவட்டத்தலைவர் பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தலைவரின் செயல்திட்டங்கள் (International Presidents Programme) என பணியாற்றினார்கள்.

நம் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 107. அந்த ஆண்டு நம் லயன்ஸ் மகளிர் சங்கத்தலைவியாக லயன் மகளிர் வத்சலா தனசேகரன் அவர்கள் பணியாற்றினார்கள். லயன்ஸ் மகளிர் சங்கம் அந்த ஆண்டு நமது ஊர் ரயில் நிலையத்தில் 4 சிமிண்ட் பெஞ்ச்களை இலவசமாக நிறுவி கொடுத்தது. நம் லயன்ஸ் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றும் நடத்தப்பட்டது. தோல்வியாதிகள் சிகிச்சை முகாம் ஒன்றும் நடைபெற்றது.

1985-86ம் ஆண்டு நம் சங்கத்தின் தலைவராக பதவியேற்று வழி நடத்திச்சென்றவர் லயன் A. ஆறுமுகச்சாமி அவர்கள். செயலாளராக லயன் G. அசோகன் அவர்களும், பொருளாளராக லயன் C.R. ரகுநாதன் அவர்களும் செயல்பட்டார்கள். நம் சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112. லயன்ஸ் மகளிர் சங்கத்தின் தலைவி லயன் மகளிர் கஸ்தூரி ஆறுமுகச்சாமி, செயலாளர் லயன் மகளிர் நளினி அசோகன். மதுரை லயன் டி.எம். ஜம்புலிங்கம் ஆளுநராயிருந்த இவ்வாண்டிலே லயன் எல். பழனிச்சாமி அவர்கள் அந்த ஆண்டு துணை மாவட்ட ஆளுநராக மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள். லயன் ஏ.சி. கனகசபை அவர்கள் மாவட்டத்தலைவர் (International Understanding and Co-operation) எனவும் லயன் C. சுபாஸ்சிங் இந்தியாராஜன் மாவட்டத்தலைவர் - Hearing & Speech Action and Work With The Deaf எனவும் பதவி வகித்தார்கள். ஒரு இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்காக ஒரு டெலிவிசன் இலவசமாக வழங்கப்பட்டது. காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. சிவகாசி லயன்ஸ் பள்ளிக்கு மின் விசிறிகள், தட்டச்சு இயந்திரம் முதலியன வழங்கப்பட்டது. மண்டல மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது.

1986-87ம் லயன்ஸ் ஆண்டு தலைவர் லயன் I. குருசாமி அவர்கள். லயன் M.A.P. சேர்மராஜ் செயலாளராகவும், லயன் A.P. செல்வராஜன் பொருளாளராகவும் பணியாற்றினார்கள். சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் வெள்ளிவிழா (25 ஆண்டுகள்) அந்த ஆண்டு பட்டய தின விழாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் மாத இதழ் மாதம் தோறும் வெளியிடப்பட்டது. மலர் ஆசிரியராக லயன் K. அம்புலிராஜன் அவர்கள் பணியாற்றினார்கள். லயன் சங்க இதழ் “The Jewel” என்ற பெயரில் 10 இதழ்கள் வெளிவந்தன. லயன்ஸ் மகளிர் சங்க இதழ் மாதம் தோறும் லயன் மகளிர் அருணா அசோக் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு மொத்தம் 10 இதழ்கள் “Jade” என்ற பெயரில் வெளிவந்தன. ஒரு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் நடைபெற்ற அந்த மருத்துவ முகாமில் 700க்கும் மேற்பட்ட ஏழைகள் பயன் பெற்றனர். நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு முகாமும் சேர்த்து நடத்தப்பட்டது. ஒரு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட Cataract Surgery-க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு கண்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த ஆண்டு கோட்டயம் லயன்ஸ் சங்கம் (Dist. 324 E) மற்றும் Bangalore Jeyamahal லயன்ஸ் சங்கம் (Dist. 324-D-1) ஆகிய சங்கங்களுடன் சிவகாசி லயன்ஸ்கள், லயன்ஸ் மகளிர்கள் கூட்டுக்கூட்டங்கள் நடத்தின. உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 119. லயன் K.S.A.A. ஜெயபால் அவர்கள் மாவட்டத்தலைவர் Recreation & Talent Promotion of Children. மாவட்ட ஆளுநர் லயன் A.S. சுப்பையன் (கோவை) அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். மாவட்ட மாநாடு மதுரையில் நடைபெற்றது.

1987-88 சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்றவர் லயன் S. செண்பகராஜ் அவர்கள். அவருடன் செயலாளராக லயன் S. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக லயன் P. சிவசுப்பிரமணியம் ஆகியோர் பணியாற்றினர். மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 117. லயன்ஸ் மகளிர் சங்கத்தின் தலைவியாக லயன் மகளிர் மீனாட்சி சங்கரேஸ்வரன் அவர்களும் லயன் மகளிர் இந்துமதி கிருஷ்ணமூர்த்தி செயலாளராகவும், லயன் மகளிர் கஸ்தூரி சிவசுப்பிரமணியன் பொருளாளராகவும் பணியாற்றினார். மாவட்ட ஆளுநர் S.V.S. சிவநாத் (மதுரை) அவர்களின் அமைச்சரவையில் லயன் A.C. கனகசபை அவர்கள் வட்டாரத்தலைவராக பணியாற்றினார். அவருடன் லயன் A.S. ஆறுமுகச்சாமி அவர்கள் மாவட்டத் தலைவர் Photography என அமைச்சரவை உறுப்பினராக பணியாற்றினார்கள். அந்த ஆண்டு நீரிழிவு நோய் சிகிச்சை முகாம் விளாம்பட்டி கிராமத்திலும் தட்டம்மை தடுப்பு மற்றும் டி.பி. தடுப்பு முகாம்கள் தாயில்பட்டி கிராமத்திலும் நடைபெற்றன. மாணவ மாணவிகளுக்கு பல் நோய் கண்டுபிடிப்பு முகாம் நடத்தி மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுக்கப்பட்டது. கண்சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டது. இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

தோல் வியாதிகள் தடுப்பு முகாம் பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. மெப்கோ இன்ஜினியரிங் கல்லூரி முன்பு விருதுநகர் ரோட்டில் பேருந்து பயணிகள் தங்கும் நிழற்கூடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. லயன்ஸ் பள்ளிக்கு கம்யூட்டர் நிறுவுவதற்கு ரூ. 10,000/- வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கம் சார்பில் “The Jewel” மாத இதழ் 10ம் லயன் கே. அப்துல்சுக்கூர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது.

1988-89 லயன்ஸ் ஆண்டில் சங்கத்தின் தலைவர் லயன் G. ராமமூர்த்தி அவர்கள் செயலாளராக லயன் K. அப்துல் சுக்கூர் அவர்களும் பொருளாளராக லயன் A.N. ராகவன் அவர்களும் செயலாற்றினார்கள். லயன்ஸ் மகளிர் சங்கத்திற்கு லயன் மகளிர் பிரேமலதா ராமமூர்த்தி அவர்கள் தலைவியாகவும் லயன் மகளிர் அருணா அசோக் அவர்கள் செயலாளராகவும், லயன் மகளிர் அனுசுயா ராகவன் அவர்கள் பொருளாளராகவும் பணியாற்றினார்கள். லயன்ஸ் சங்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 117. மாவட்ட ஆளுநர் லயன் G. ராமசாமி (கோவை) அவர்களின் அமைச்சரவையிலே லயன் A. ஆறுமுகச்சாமி அவர்கள் “குழந்தை நலம்” - மாவட்டத்தலைவராக பணியாற்றினார்கள். அந்த ஆண்டு அவர் சிறப்பாக பணியாற்றினார்கள். குழந்தைகளுக்கு மருத்துவமனைக்கு சென்று பால் பவுடர்கள் இலவசமாக வழங்கினார்கள். மல்லிப்புதூர் இளம் குற்றவாளிகள் பள்ளியில் இலவசமாக தண்ணீர் ஜெட்பம்பு வழங்கப்பட்டது. முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, சிவகாசியில் மாணவர்களுக்கு கண்நோய் கண்டுபிடிப்பு முகாம் நடத்தப்பட்டு ஏழை மாணவர்களுக்கு இலவச கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது. லயன்ஸ் மகளிர் சங்கம் சிவகாசி ரயில்வே நிலையத்தில் மேலும் 5 சிமெண்ட் பெஞ்சுகளை நிறுவியது. சிவகாசி அரசினர் மருத்துவமனைக்கு Wheel Chair, Cot, Stretcher என உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மாவட்ட மாநாடு மதுரையில் நடைபெற்றது.

1989-90ம் ஆண்டு தலைவர் பொறுப்பினை ஏற்றவர் லயன் A.P செல்வராஜன் அவர்கள். செயலாளராக லயன் K.A. முருகையன் அவர்களும், பொருளாளராக லயன் P.S.C.D. விஜயன் அவர்களும் செயலாற்றினார்கள். அந்த ஆண்டு உறுப்பினர் எண்ணிக்கை 115. லயன்ஸ் மகளிர் சங்கத்தின் தலைவி லயன் மகளிர் ஜெயலட்சுமி செண்பகராஜ் அவர்கள். செயலாளர் லயன் மகளிர் திருச்செல்வி டென்சிங், பொருளாளர் லயன் மகளிர் முருகாம்பாள் ராஜகோபால் ஆகியோர். லயன் A.S. ஆறுமுகச்சாமி அவர்கள் மாவட்ட ஆளுநர் R. குருமூர்த்தி (மதுரை) அவர்களின் அமைச்சரவையில் வட்டாரத்தலைவராகவும், லயன் A. தனபாலன் அவர்கள் மாவட்டத்தலைவர் “Club Guidance-324-B4” எனவும், லயன் I. குருசாமி அவர்கள் மாவட்டத்தலைவர் குழந்தைத் தொழிலாளர் நலம் எனவும், லயன் L. பழனிச்சாமி அவர்கள் மாவட்டத் தலைவர் மாவட்ட ஆளுநரின் அலுவல் முறை வருகை எனவும், லயன் G. ராமமூர்த்தி அவர்கள் மாவட்டத்தலைவர் Safety of Workers In Match & Fireworks Industries எனவும் அங்கம் வகித்தனர். மாத இதழ் “The Jewel” லயன் எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதந்தோறும் மொத்தம் 10 இதழ்கள் வெளியிடப்பட்டது. லயன்ஸ் மகளிர் சங்கம் சார்பில் லயன் மகளிர் இந்துமதி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியையாகக் கொண்டு 3 இதழ்கள் காலாண்டு இதழ்களாக வெளிவந்தன. மல்லிபுதூர் இளம் குற்றவாளிகள் பள்ளியில் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவச கண் குறை கண்டுபிடிப்பு முகாம் நடத்தப்பட்டது. இலவச கண்கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. சிவகாசி நகராட்சியுடன் இணைந்து தொழுநோய் மருத்துவமுகாம் நடைபெற்றது. பேர்நாயக்கன்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாமும், இலவச மருத்துவமுகாமும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் கொடைக்கானலுக்கு 2 நாட்கள் சுற்றுலாவாக நம் லயன்ஸ் குடும்பங்களாக சென்று வந்தோம். 47 லயன்ஸ் குடும்பங்கள் கலந்து கொண்டன. அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரிக்கு முன் திருவில்லிபுத்தூர் ரோட்டில் இரண்டு பேருந்து பயணிகள் தங்கும் நிழற்கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது. மாவட்ட மாநாடு மதுரையில் நடைபெற்றது.

1990-91ம் ஆண்டு புதியதாக உருவான லயன்ஸ் மாவட்டம் 324 பி-4ல் நம் சங்கத் தலைவராக லயன் K.A.P.A. ராஜசேகரன் அவர்கள் பதவியேற்றார். அவருடன் லயன் S. சேர்மத்துரை செயலாளராகவும், லயன் J. ரமேஷ்குமார் பொருளாளராகவும் செயலாற்றினார்கள். மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 114. லயன்ஸ் மகளிர் சங்கத்தின் தலைவியாக லயன் மகளிர் அமர்ஜோதி ராஜசேகரன் அவர்களும், செயலாளராக லயன் மகளிர் முருகாம்பாள் ராஜகோபால் அவர்களும், பொருளாளராக லயன் மகளிர் சாரதா பாபுசிதம்பரம் அவர்களும் பணியாற்றினார்கள். லயன் ஏ.சி. கனகசபை அவர்கள் மாவட்ட ஆளுநர் ஆர்.ஏ.கே.வி. சாம்சன் (நாகர்கோவில்) அவர்களின் அமைச்சரவையில் மண்டலத்தலைவராக செயலாற்றினார்கள். அவருடன் லயன் A. வைரப்பிரகாசம் அவர்கள் மாவட்டத்தலைவர் Honorary Committee, லயன் L. பழனிச்சாமி அவர்கள் மாவட்டத்தலைவர் - லயன்ஸ் மகளிர் சங்கங்கள், லயன் A.P. செல்வராஜன் அவர்கள் மாவட்டத்தலைவர் - Inter District Co-ordination, லயன் S. செண்பகராஜ் அவர்கள் மாவட்டத்தலைவர் - Inter Club Meetings, லயன் C. சுபாஸ்சிங் இந்தியாராஜன் அவர்கள் மாவட்டத்தலைவர் - Long Range Planning, லயன் மகளிர் ஹேமா சுபாஸ்சிங் அவர்கள் - Lioness Associate Chairperson - Lioness Interclub Meetings என 5 லயன்ஸ்களும் 1 லயன் மகளிருமாக மொத்தம் 6 உறுப்பினர்கள் முதல்முறையாக அதிக அளவில் மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.

இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று விளாம்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது. 36 இலவச கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மல்லிபுதூர் இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளியில் இலவச மருத்துவ பல் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. நீரிழிவு சிகிச்சை மற்றும் பொருட்காட்சி நம் லயன்ஸ் பள்ளியில் நடத்தப்பட்டது. சிறப்பாக மண்டல மாநாட்டினை சிவகாசியில் நம் லயன்ஸ் சங்கம் நடத்தியது. நமது சங்கம் நடத்தும் மூன்றாவது மண்டல மாநாடு இதுவாகும். இரண்டாவது முறையாக கொடைக்கானலுக்கு ஜனவரி 26, 27 தேதிகளில் குடும்ப சுற்றுலாவாக நமது லயன்ஸ் சங்கத்தின் 33 லயன்ஸ் குடும்பங்கள் சென்று வந்தனர். ”The Jewel” மாத இதழ் மாதம் தோறும் மொத்தம் 10 இதழ்கள் லயன் எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளியிடப்பட்டது. மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது.

1991-92ம் ஆண்டில் தலைவராக லயன் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், செயலாளராக P. சிவசுப்பிரமணியம் அவர்களும், பொருளாளராக லயன் A.S. விஜயசங்கர் அவர்களும் பணியாற்றினர். மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 116. சங்க மாத இதழ்கள் லயன் K.A. முருகையன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. லயன்ஸ் மகளிர் சங்கத்தலைவியாக லயன் மகளிர் மீரா வைரப்பிரகாசம் அவர்களும், செயலாளராக லயன் கஸ்தூரி சிவசுப்பிரமணியம் அவர்களும், பொருளாளராக லயன் மகளிர் செந்தாமரை விஜயசங்கர் அவர்களும் பணியாற்றினார்கள். லயன்ஸ் மகளிர் சங்கம் லயன் மகளிர் ராதிகா முருகையன் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு “Jade” காலாண்டு இதழ் 3 வெளியிட்டது.

அந்த ஆண்டு அகில உலக லயன்ஸ் இயக்கம் தனது 75 ஆண்டு நிறைவு வைரவிழா ஆண்டாக கொண்டாடியது. அதனை கொண்டாடும் முகமாக சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொது நலச்சேவையில் மிகச்சிறந்து விளங்குபவர்கள் ஆடவரா? மகளிரா?”என மாபெரும் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அதனை சிறப்பாக ஏற்பாடு செய்தவர் வைரவிழா குழுத்தலைவர் முன்னாள் தலைவர் லயன் M. ராமமூர்த்தி ஆவார்கள். பேராபட்டி கிராமத்தில் ஒரு பொது இலவச மருத்துவமுகாம் மற்றும் கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. லயன் பள்ளி மாணவர்களுக்கு Blood Group Identification Camp நடத்தப்பட்டு மாணவர்களுக்கு Blood Group அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 17 ஏழைகளுக்கு கண்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. திருவில்லிப்புத்தூர் ரோடு சாட்சியாபுரத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. 5 காது கேளாதவர்களுக்கு காது கேட்கும் கருவி, தொழு நோயாளிகளுக்கு செருப்புகள் போர்வைகள் வழங்கப்பட்டது. மற்றும் தொழுநோய் சிகிச்சை முகாம் அனுப்பன்குளம் கிராமத்திலும் நடத்தப்பட்டது. இலவச தட்டம்மை தடுப்பு ஊசி போடும் மருத்துவமுகாம் ஒன்றும் நடத்தப்பட்டது. காரனேசன் பள்ளி மாணவியர்களுக்கு இலவச கண்பார்வைக்குறைவு கண்டுபிடிப்பு முகாம் நடத்தப்பட்டு 15 கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆளுநராக ராஜபாளையம் லயன் P.A.B. ராஜு அவர்கள் திறம்பட மாவட்டத்தை வழி நடத்தினார்கள். மாவட்ட மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது.

1992-93 லயன்ஸ் ஆண்டு நம் இந்தியர், லயன் ரோஹித் மேத்தா அவர்கள் அகில உலக லயன் இயக்கத்தின் தலைவராக பதவி ஏற்ற ஆண்டு, லயன் G.D. நடராஜ்பிரபு அவர்கள் நம் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்றார்கள். லயன் J. ரமேஷ்குமார் அவர்கள் செயலாளராகவும், லயன் S.R ஸ்ரீதர் அவர்கள் பொருளாளராகவும் பணியாற்றினார்கள். அந்த ஆண்டு நம் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 116.

லயன் A. தனபாலன் அவர்கள் மாவட்ட அமைச்சரவையில் மண்டலத்தலைவராகவும் லயன் A.C. கனகசபை Interclub Meetings, லயன் S. கிருஷ்ணமூர்த்தி District Greeter, லயன் L. பழனிச்சாமி Activities, K.A.P.A. ராஜசேகரன் Feed The Needy என 5 லயன்ஸ்கள் ஆளுநர் லயன் டாக்டர் பி.என். கதிரேசன் (தூத்துக்குடி) அவர்களின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக பணியாற்றினார்கள். மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது.

அந்த ஆண்டும் நம் சங்க மாத இதழ் “The Jewel” முதன்முறையாக மொத்தம் 12 இதழ்கள் மாதம் தோறும் லயன் G. சந்திரமோகன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. நமது அகில உலக லயன்ஸ் இயக்கம், லயன்ஸ் மகளிர் சங்கங்களின் அங்கீகாரத்தினை ரத்து செய்து விட்டதால் நமது லயன்ஸ் மகளிர் சங்கத்தையும் கலைக்க முடிவெடுக்கப்பட்டது. லயன்ஸ் மகளிர்கள் அதிக அளவில் லயன்ஸ்களாக சங்கத்தில் இணைந்தனர்.

நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 30 ஆண்டுகள் கழித்து சிவகாசி நகரில் ஆர்வமிக்க இளைஞர்களைக் கொண்ட புதிய சிவகாசி தொழில் நகர் லயன்ஸ் சங்கம் நம் சங்கத்தால் துவக்கி வைக்கப்பட்டது. அதன் விரிவாக்கத் தலைவர்களாக லயன் எஸ். செண்பகராஜ் மற்றும் லயன் P. சிவசுப்பிரமணியம் ஆகியோரும் வழிகாட்டி லயனாக லயன் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நியமிக்கப்பட்டனர். 42 பட்டய உறுப்பினர்களைக் கொண்டு ஆளுநர் லயன் டாக்டர் P.N. கதிரேசன் அவர்களால் இந்த லயன்ஸ் சங்கம் துவக்கி வைக்கப்பட்டது. லயன் A. தனபாலன் அவர்கள் புதிய பட்டய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிவகாசி அம்மன் கோவில்பட்டி முனிசிபல் மேல்நிலைப்பள்ளியில் ஒரு பொது இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சிவகாசி காகா சண்முகநாடார் நினைவு கண் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை நடத்தப்பட்டது. 20 ஏழைகளுக்கு இலவசமாகக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. உடல் ஊனமுற்ற பள்ளி மாணவனுக்கு இலவசமாக 3 சக்கர வண்டி அளிக்கப்பட்டது. விளாம்பட்டி கிராமத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. உடல் ஊனமுற்ற இருவருக்கு 3 சக்கர வண்டிகள் இலவசமாக அளிக்கப்பட்டது. அகில உலக லயன்ஸ் இயக்கத்திட்டமாகிய “Peace Poster Contest” நடத்தப்பட்டது. முதல் பரிசு பெற்ற சித்திரம் அகில உலக லயன்ஸ் தலைமையகத்திற்கு போட்டிக்காக மாவட்ட ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு பெண் உறுப்பினர்கள் சேர்த்து மிக அதிக அளவில் புதிய லயன்ஸ் உறுப்பினர்களாக 26 லயன்ஸ்கள் இணைக்கப்பட்டனர். இது தான் அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் இணைந்த ஆண்டாகும். விளாம்பட்டி கிராமத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் ஒன்று நடத்தப்பட்டது. 22 பேர்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 18 தொழு நோயாளிகளுக்கு இலவச செருப்புகள் வழங்கப்பட்டது. 6 உடல் ஊனமுற்றோர்க்கு இலவசமாக ஊன்றுகோல்கள் (Calipers) வழங்கப்பட்டது. ஒரு அனாதை பெண்ணிற்கு மாரனேரி கிராமத்தில் இலவசமாக வீடு ஒன்று கட்டிக்கொடுக்கப்பட்டது. சசி நகரில் ஒரு பேருந்து பயணிகள் தங்கும் நிழற்கூடம் ஒன்றும் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட மகாநாட்டில் நம் சங்கத்தின் லயன் L. பழனிச்சாமி அவர்கள் ஏக மனதாக நம் மாவட்ட ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார்கள். அவர் நமது சங்கத்தின் ஆளுநர் பதவி வகிக்கும் இரண்டாவது லயன், மற்றுமோர் பொன்னான லயன்ஸ் ஆண்டு. நம் லயன்ஸ் சங்க வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

1993-94ம் ஆண்டு நம் சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்றவர் லயன் A.N. ராமசாமி அவர்கள், செயலாளராக லயன் S.P.S. அமர்நாத் அவர்களும், பொருளாளராக லயன் எஸ். ஸ்டாலின் அவர்களும் பணியாற்றினர். உறுப்பினர்களின் எண்ணிக்கை 139. மாவட்ட ஆளுநர் லயன் எல். பழனிச்சாமி அவர்கள். லயன் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களை மாவட்ட செயலாளராகவும், லயன் A.C. கனகசபை அவர்களை மாவட்ட பொருளாளராகவும், லயன் A.S ஆறுமுகச்சாமி அவர்களை மாவட்ட இணைச்செயலாளராகவும் நியமித்தார்கள். அந்த ஆண்டு மேலும் மாவட்ட அமைச்சரவையில் லயன் A.P. செல்வராஜன் அவர்கள் வட்டாரத் தலைவராகவும், லயன் P. அருணாசலம் அவர்கள் மாவட்டத்தலைவர் ஆளுநர் அலுவல் முறை வருகை, லயன் K.S.S.P. தனசேகரன் அவர்கள் மாவட்டத்தலைவர் Convention, லயன் A. தனபாலன் அவர்கள் மாவட்டத்தலைவர் Interdistrict Co-ordination லயன் G.D. நடராஜ்பிரபு அவர்கள் மாவட்டத்தலைவர் மாவட்ட கையேடு, லயன் . சிவசுப்பிரமணியன் அவர்கள் மாவட்டத்தலைவர் Cabinet meetings & Cabinet Officer’s kit மற்றும் CSF Group Coordinator என பதவி வகித்தனர்.



இளம் லயன் சங்க ஆலோசகர் லயன் S.R. ஸ்ரீதர் அவர்கள் வழிகாட்டுதலில் இளம் லயன்ஸ் சங்கம் பல அரிய சேவைகள் செய்தது. சிறிய கிராமத்திலுள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு அறைக்கட்டிடம் கட்டிக்கொடுத்தது; லயன்ஸ் பள்ளிக்கு Over Head Projector வாங்கிக்கொடுத்தது என பல சேவைகள் குறிப்பிடும்படியானது. லயன்ஸ் சங்கம் 5 இலவச சிகிச்சை முகாம்கள், 4 பொது மருத்துவ முகாம்கள், தட்டம்மை தடுப்பு ஊசி போடும் முகாம் நடத்தியது; இலவச கண்கண்ணாடிகள் கொடுத்தது; உடல் ஊனமுற்றோர்க்கு மூன்று சக்கர வண்டிகள், ஊன்று கோல்கள் CSFமற்றும் காதுகேளாருக்கு காது கேட்கும் கருவிகள், லயன்ஸ் பள்ளிக்கு ஜெனரேட்டர் ஒன்றும் வழங்கியது; ஊராம்பட்டி பள்ளிக்கு தண்ணீர் தொட்டி கட்டி, குழாய்கள் அமைத்துக் கொடுத்தது; தொழுநோயாளிகளுக்கு செருப்புகள் வழங்கியது; நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு முகாம் நடத்தியது; மஹாராஸ்டிரா மாநில நில நடுக்கம் அதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 16,800/ வழங்கியது; இது போன்ற பல அரிய சேவைத்திட்டங்களை நிறைவேற்றியது.

CSF நிதியாக US$ 2210 களை அளித்தது. லயன் A.S. ஆறுமுகச்சாமி, லயன் A.P. செல்வராஜன் மற்றும் லயன் A.C. கனகசபை ஆகியோர் புதிய Melvin Jones Fellow ஆக பதிவு செய்துள்ளனர். அந்த ஆண்டு 19 புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தனர். 6 சங்க மாத இதழ் “The Jewel” வெளியிடப்பட்டது.

லயன் L. பழனிச்சாமி அவர்கள் ஆளுநராக அமெரிக்காவின் மின்னியோபோலீஸ் நகரில் நடைபெற்ற அகில உலக லயன்ஸ் மகாநாட்டிலே பதவியேற்று சிவகாசி திரும்பினார்கள். பின் சிவகாசி லயன்ஸ் சங்கம் மாவட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவினை சிவகாசியில் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். அதே போன்று ஏப்ரல் 16, 17 தேதிகளில் குற்றாலத்தில் நமது மாவட்டத்தின் 4வது மாவட்ட மகாநாட்டினை லயன் A.P.செல்வராஜன் அவர்களை நடத்துனர் குழுத்தலைவராகக் கொண்டு மாவட்டமே போற்றும் வண்ணம் சீரும் சிறப்புமாக மாவட்ட மகாநாட்டை நடத்தினார்கள். சிவகாசி சங்கம் முதல் முறை மார்ச் மாதம் 20ம் தேதி ஆளுநர் லயன் L. பழனிச்சாமி அவர்களின் அலுவல்முறை வருகை நிகழ்ச்சியை சிவகாசி நகரமே வியக்கும் வண்ணம் சிறப்பாக நடத்தியது. மாவட்டத்தின் பல சங்கங்களிலிருந்தும் லயன்ஸ்கள் வருகை புரிந்து சிறப்பித்தனர். மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது.

1994-95 ஆம் ஆண்டு நம் சங்கத்தின் தலைவராக லயன் M. ராமமூர்த்தி அவர்கள் பதவி ஏற்று சிறப்பாக சங்கத்தை நடத்தி சாதனைகள் பல புரிந்தார். அவருடன் லயன் R. அசோக்குமார் செயலாளராகவும், லயன் K. அம்புலிராஜன் பொருளாளராகவும் பணியாற்றினர். உறுப்பினர் எண்ணிக்கை 153. சிவகாசி லயன்ஸ் பள்ளிக்கு நிரந்தர சேவை திட்டமாக ரூ 13,000/- மதிப்பீட்டில் ஒரு ஜெனரேட்டர் அறை மற்றும் மாணவியருக்கான உடை மாற்றும் அறையும் கட்டித் தந்துள்ளனர்.

இலவச மருத்துவ முகாம்கள், 3 இலவச கண்சிகிச்சை முகாம்கள், அரசு மருத்துவமனைக்கு நிரந்தர திட்டமாக தண்ணீர் டேங்க் அமைத்து மருத்துவமனை முழுவதும் தண்ணீர் கிடைக்க குழாய் அமைத்து கொடுத்தது. NRKR ரோடு முக்கிய சந்திப்பில் மணிக்கூண்டு நிறுவியது. நெய்யூர் திங்கள் சந்தை C.S.I. மருத்துவமனைக்கு Moist Heating Therapy இயந்திரம் வழங்கியது. Lions Quest மற்றும் Youth Out Reach திட்டங்களுக்கு A.J. கல்லூரியில் கருத்தரங்கு நடத்தியது ஆகியன இந்த ஆண்டின் சேவை திட்டங்கள்.

சங்கரன்கோவிலில் லயன்ஸ் மற்றும் லயன்ஸ் மகளிர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மற்றும் 10 புதிய உறுப்பினர்களை நமது சிவகாசி லயன்ஸ் சங்கத்தில் இணைத்தது ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாகும். நாகர்கோவிலில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த ஆண்டில் மாவட்டம் ஆளுநர் லயன் V. சந்திரசேகரன் தலைமையில் பல சாதனைகள் படைத்தது. அவருக்கு உறுதுணையாக துணை ஆளுநர் லயன் R. கோபாலகிருஷ்ணன் அவர்கள் பணியாற்றினார்கள். முதல் முறையாக நமது சங்கம் இந்த ஆண்டு மாவட்ட போட்டியில் முதல் இடத்தை பெற்றது. பல மாவட்ட பரிசுகளையும் வென்றது பாராட்டுக்குரியது. “The Jewel” மாத இதழ், 12 இதழ்கள் லயன் J. ரமேஷ்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. கொடைக்கானலில் “லயன்ஸ் குடும்ப சுற்றுலா”வினை நடத்தி நம் தோழமை, அன்பு, ஒற்றுமையை வளர்த்துக் கொண்டோம். லயன் மீரா வைரப்பிரகாசம் மற்றும் லயன் G. ராமமூர்த்தி ஆகியோர் இந்த ஆண்டு MJF விருது பெற்றனர். மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது. லயன் A.P. செல்வராஜன் அவர்கள் மண்டலத் தலைவராகவும், லயன் S. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வட்டாரத் தலைவராகவும் செயல்பட்டனர். நம் சங்கம் மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்தியது. மண்டல மாநாட்டு நடத்துனர் குழுத்தலைவர் லயன் G.D. நடராஜ் பிரபு.

1995-96 ஆம் ஆண்டு ஆளுநர் லயன் R. கோபாலகிருஷ்ணன் MJF மற்றும் துணை ஆளுநராக லயன் SNRD. ராமசுப்பிரமணியராஜா ஆகியோர் நமது 324-B4 மாவட்டத்தை தலைமையேற்று சிறப்பாக நடத்தினர். அந்த ஆண்டு நம் சங்கத்தின் தலைவர் லயன் P. சிவசுப்பிரமணியம் அவர்கள். அவருக்கு உறுதுணையாக லயன் A குருமோகன் அவர்கள் செயலராகவும், லயன் R. ஆனந்தராஜன் அவர்கள் பொருளாளராகவும் தோள் சேர்த்தனர். லயன் M. ராமமூர்த்தி அவர்கள் வட்டாரத்தலைவராகவும், லயன் S. சந்திரசேகரன் மாவட்டத்தலைவர் Convention லயன் K.S.S.P. தனசேகரன் Eye camps, லயன் C. கனகசபை Annual Club Budget, லயன் A.P. செல்வராஜன் Membership ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் பணியாற்றினார்கள்.

இந்த ஆண்டு திருவேங்கடத்தில் ஒரு புதிய லயன்ஸ் சங்கமும் லயன்ஸ் மகளிர் சங்கமும் நம் சங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் அந்த ஆண்டு மாவட்ட மாநாட்டை குற்றாலத்தில் வைத்து சிவகாசி லயன்ஸ் சங்கம் சிறப்பாக நடத்திக் கொடுத்தது. SFR பெண்கள் கல்லூரியில் Lions Quest திட்டத்தை நடத்தியது. அந்த ஆண்டு லயன் M.A.P. சேர்மராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “The Jewel” சங்க மாத இதழ் 10 இதழ்கள் வெளியிடப்பட்டது.

6 புதிய உறுப்பினர்கள் நம் சங்கத்தில் இணைந்தனர். 3 இலவச கண் சிகிச்சை முகாம், 2 பொது மருத்துவமுகாம் நடைபெற்றது. ரிசர்வ் லைனிலுள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு கழிப்பு அறை மற்றும் தண்ணீர் தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டது. லயன் பள்ளிக்கு கம்ப்யூட்டர் மற்றும் டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது. மாவட்டப் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றது.

1996-97ம் ஆண்டு சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் லயன் R. சந்திரப்பிரகாஷ் அவர்கள். லயன் S.R. ஸ்ரீதர் செயலாளராகவும், லயன் G. சந்திரமோகன் அவர்கள் பொருளாளராகவும் இணைந்து சிறப்பாக சங்கத்தை நடத்திச் சென்றனர்.

மாவட்ட ஆளுநராக லயன் SNRD. ராமசுப்பிரமணியராஜா அவர்கள் பதவி ஏற்று ஒரு மாதத்தில் நமது மாவட்டம் அவரை இழக்க நேர்ந்தது. பின் மாவட்ட ஆளுநராக லயன் A.K.D. தர்மகிருஷ்ணராஜா அவர்கள் மாவட்டத்தை வழி நடத்தினார்கள். அவருடன் துணை ஆளுநராக லயன் PL. முருகப்பன் அவர்கள் பணியாற்றினார்கள். மாவட்ட அமைச்சரவையில் லயன் K.S.S.P. தனசேகரன் அவர்கள் மண்டலத்தலைவராகவும், மாவட்டத்தலைவர்களாக லயன் C. கனகசபை (District Finance),லயன் A.P செல்வராஜன் (Extension) லயன் M. ராமமூர்த்தி (Governor’s Official Visit), மற்றும் லயன் P. சிவசுப்பிரமணியம் (Welfare of Child Labour) ஆகியோர் பணியாற்றினர். அந்த ஆண்டு மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்தி பெருமை சேர்த்தது நம் சிவகாசி லயன்ஸ் சங்கம். மேலும் சிவகாசி காஸ்மாஸ் லயன்ஸ் மற்றும் லயன்ஸ் மகளிர் சங்கங்களை தோற்றுவித்தது. லயன் S. ஸ்டாலின் லயன் வழிகாட்டியாக பணியாற்றினார். மாவட்டப் போட்டியில் மீண்டும் முதல் நிலையை அடைந்து பெருமை பெற்றது.

சங்க இதழ் “The Jewel” 11 இதழ்கள் - ஆசிரியராக லயன் S. ஸ்டாலின் அவர்களின் மேற்பார்வையில் வெளிவந்தது. கூட்டு மாவட்ட மற்றும் மாவட்ட விருதுகளையும் பெற்றது. 6 இலவச கண்சிகிச்சை முகாம்கள், ரத்ததான முகாம், 4 பொது மருத்துவமுகாம்கள், நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு முகாம், மணல்வாரி அம்மை தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. Lions Quest திட்டத்திற்கு 15 ஆசிரியர்களுக்கு திட்டப்பயிற்சிக்கு உதவியது சிறப்பாகும். அந்த ஆண்டு 4 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். சங்க உறுப்பினர் எண்ணிக்கை 167.

மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. லயன் K.S.S.P. தனசேகரன் அவர்கள் MJF விருதினை பெற்றார். அந்த ஆண்டு பள்ளபட்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு மாடிப்படி கட்டிக்கொடுத்தது, குடிதண்ணீர் தொட்டி 2 நகரின் முக்கிய தெருக்களில் பொது மக்கள் உபயோகத்திற்காக அமைத்துக் கொடுத்தது. 10 சிமெண்ட் குப்பைத் தொட்டிகள், சிவகாசி முனிசிபாலிட்டிக்கு வழங்கியது, 4 கம்ப்யூட்டர்கள், 1 ஏர்கண்டிஷனர் ஆகியன லயன்ஸ் பள்ளிக்கு வழங்கியது. கெமிக்கல் Lab Table ஒன்று கிருஷ்ணபேரி பள்ளிக்கு வழங்கியது ஆகியன சிறப்பு சேவைத் திட்டங்களாகும்.

1997-98ம் ஆண்டு சிவகாசி லயன்ஸ் சங்கத்தின் தலைவராக லயன் A.M.S.G. அசோகன் அவர்கள் பொறுப்பு ஏற்றார். அவருக்கு செயலராக லயன் S. ராமர் அவர்களும் பொருளாளராக, லயன் G. சந்திரமோகன் அவர்களே மீண்டும் பதவி ஏற்று செவ்வனே சங்கத்தை வழி நடத்தினர். சங்க உறுப்பினர் எண்ணிக்கை 169.

மாவட்ட ஆளுநர் லயன் P.L. முருகப்பன், துணை ஆளுநர் லயன் K.C. ஜெயதாஸ் ஆகியோர் மாவட்டத்தை சிறப்பாக வழிநடத்தினர். லயன் R. சந்திரபிரகாஷ் அவர்கள் வட்டாரத்தலைவராகவும், லயன் S. சந்திரசேகரன் (Club Constitution Bye Laws) லயன் C. கனகசபை (Free Marriages) லயன் M. ராமமூர்த்தி (Leo Clubs) லயன் A.P. செல்வராஜன் (Leadership Development) லயன் P. சிவசுப்பிரமணியன் (Calendar of Events) ஆகியோர் மாவட்டத்தலைவர்களாகவும் அமைச்சரவையில் பணியாற்றினர்.

சங்க மாத இதழ் “The Jewel” லயன் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியராகக் கொண்டு 12 இதழ்கள் வெளியானது. அதில் 4 சிறப்பு இதழ்களும் அடக்கம். மாவட்ட மற்றும் கூட்டு மாவட்ட அளவில் பரிசுகள் பெற்று சிறப்பு பெற்றது.

3 கண்சிகிச்சை முகாம்கள், நீரிழிவு கண்டுபிடிப்பு முகாம், ஹோமியோபதி மருத்துவமுகாம், ரத்ததானமுகாம், மணல்வாரி அம்மை தடுப்பு முகாம், சித்தா மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. சிவகாசி நகரில் ஒரு போர்வெல், கைபம்பு அமைத்து பொது மக்களுக்கு வழங்கியது. 3 இடங்களில் குடிதண்ணீர் தொட்டிகள் அமைத்துக் கொடுத்தது, லிங்கபுரம் காலனி பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு 1 லட்சம் செலவில் வகுப்பு அறைகள் கட்டிக்கொடுத்தது ஆகிய பல சேவைத்திட்டங்களை நிறைவேற்றியது.

மாவட்ட அளவில் இளைஞர்களுக்காக District Youth Fes ‘97ஐ A.G. பாலிடெக்னிக்கில் நடத்தியது. 18 புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து அகில உலக லயன் சங்க “Five Star Award” பெற்றது. கொடைக்கானலில் லயன் குடும்ப சுற்றுலா நடத்தியது. Peace Poster Contest நடத்தியது. மேலும் தலைவர் லயன் A.M.S.G. அசோகன் அவர்கள் MJF விருதினை பெற்றது ஆகியன சிறப்பு நிகழ்ச்சிகளாகும். மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது.

1998 - 99ம் ஆண்டு நம் சங்கத்தின் தலைமை பொறுப்பினை ஏற்று சிறப்பித்தவர் லயன் R. அசோக்குமார் அவர்கள். லயன் S. ஸ்டாலின் செயலாளராகவும், லயன் S. வித்தியாதரன் பொருளாளராகவும் அவருடன் துணை நின்று செயலாற்றினார்கள்.

மாவட்ட ஆளுநர் லயன் KC. ஜெயதாஸ், துணை ஆளுநர் லயன் Dr. S. ராஜேந்திரன். லயன் A.M.S.G. அசோகன் அவர்கள் வட்டாரத்தலைவராகவும், லயன் R. சந்திரபிரகாஷ் (Ambulance Service) லயன் S. சந்திரசேகரன் (International Constitution & Bye Laws) லயன் C. கனகசபை (Fund Raising) லயன் AP. செல்வராஜன் (Fire Works Display & Prevention of Accidents) லயன் P. சிவசுப்பிரமணியம் (Printing Technology) ஆகியோர் மாவட்டத் தலைவர்களாகவும் பணியாற்றினர். உறுப்பினர் எண்ணிக்கை மாவட்டத்திலேயே முதன் முறையாக 201 என்ற இலக்கத்தை அடைந்து மாவட்டத்தின் மிகப்பெரிய சங்கமென்ற பெயரினையும் தக்கவைத்துக் கொண்டு சாதனை படைத்தது.

“The Jewel” மாத இதழ் லயன் PSA. கண்ணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 8 மாத இதழ்களாக வெளிவந்தது. World Wide Induction Day ஐ மாவட்ட நிகழ்ச்சியாக நடத்தி அன்று 12 புதிய உறுப்பினர்களையும் இணைத்தது. Peace Poster Contest நடத்தியது. Lions Quest பயிற்சி பட்டறையை A.G. பாலிடெக்னிகில் நடத்தியது. 12 ஆசிரியர்களை பயிற்சிக்காக பரிந்துரை செய்து அனுப்பியது. லயன் நளினி அசோகன் அவர்கள் இந்த ஆண்டு MJF விருந்தினை பெற்றார். அதன் மூலம் நமது சங்கத்தின் MJF விருது பெற்ற இரண்டாவது தம்பதியினர் என்ற பெயரினை லயன் அசோகன் நளினி தம்பதியினர் பெற்றனர். மாவட்டப் போட்டியில் மூன்றாவது முறையாக முதல் இடத்தை பெற்று பெருமையடைந்தது. இந்த லயன்ஸ் ஆண்டிலும் அரசு பொது மருத்துவமனைக்கு ஆஸ்துமா கண்டு பிடிப்பு இயந்திரம் வழங்கியது; A.J. பெண்கள் பாலிடெக்னிக்கின் முன் பயணிகள் நிழற்குடை அமைத்தது; அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேன் ஷெட் ஒன்று அமைத்தது; மற்றும் ஸ்டீல் ஸ்ரெட்சர் வழங்கியது; Lions Quest வகுப்பு நடத்தியது; மற்றம் மருத்துவ முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், சித்தா மருத்துவ முகாம்கள், நீரழிவு நோய் கண்டுபிடிப்பு முகாம், இரத்ததான முகாம், போர்வெல் மற்றும் கைபம்பு அமைத்து சிவகாசி நகர் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தது ஆகியவை இந்த ஆண்டின் சேவை சாதனைகள். மாவட்ட மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

1999-2000ம் லயன்ஸ் ஆண்டின் நம் சங்கத்தலைவர் லயன் J. ரமேஷ்குமார். செயலாளர் லயன் S. வித்யாதரன், பொருளாளர் லயன் EAETS. செண்பகராஜன். உறுப்பினர்கள் ஆண்டு இறுதி எண்ணிக்கை: 201. மாவட்ட ஆளுநராய், லயன் Dr.S. ராஜேந்திரன் Shine & Rain என்ற முழக்கத்துடன் செயல்பட்டார். லயன் A.M.S.G. அசோகன் மண்டலத் தலைவராய் நியமனம் பெற்று ஒரு மகத்தான மண்டல மாநாட்டினை நடத்திக் காட்டினார். மாவட்ட அமைச்சரவையில் மாவட்ட தலைவர்களாக லயன் S. அசோக்குமார் (Internet Service), லயன் R. சந்திரபிரகாஷ் (Youth Exchange), லயன் A.C. கனகசபை (World Lions Service Day) லயன் A.P. செல்வராஜன் (LCIF Week) லயன் P. சிவசுப்பிரமணியன் (Hearing Aid) செயல்பட்டார்கள். சங்க இதழ் ஆசிரியராக லயன் S.R. ஸ்ரீதர் செயல்பட்டார்கள்.

20-1-2000 அன்று நம் சங்கத்தால் மற்றுமொரு புதிய லயன்ஸ் சங்கம் ”சிவகாசி சென்ட்ரல்” என்ற பெயரில் முற்றிலும் 22 இளைஞர்களைக் கொண்டு துவக்கி வைக்கப்பட்டது. S.R. ஸ்ரீதர் லயன்ஸ் வழிகாட்டியாக செயல்பட்டார். சேவைத்திட்டங்கள் மிக அதிகமாகவும், பயனுள்ளவையாகவும் நிறைவேற்றப்பட்டன. ஆகவே சங்கத் தலைவர் லயன் J. ரமேஷ்குமார் Lion Of The Year பரிசு தரப்பட்டு மாவட்ட ஆளுநரால் கௌரவிக்கப்பட்டார்.

2000-2001ம் ஆண்டின் தலைவராக லயன் S. சேர்மத்துரை, செயலாளராக லயன் P.S.A. கண்ணன், பொருளாளராக லயன் A. குமாரவேல் MJF சிறப்பாக செயல்பட்டார்கள். சங்க இறுதி உறுப்பினர் எண்ணிக்கை 201. பொருளாளர் லயன் A. குமாரவேல் MJF விருது பெற்று சங்கத்திற்கு பெருமை சேர்த்தார். லயன் P. சிவசுப்ரமணியம் வட்டாரத் தலைவர். ராமேஸ்வரம், குற்றாலம் ஆகிய இடங்களில் வட்டாரக் கூட்டங்களை நடத்தி பெருமை சேர்த்தார். லயன் V.T.A. விஜயவேல் அவர்களை ஆளுநராகக் கொண்ட மாவட்ட அமைச்சரவையிலே மாவட்டத் தலைவர்களாக லயன் G. அசோகன் (Leadership) லயன் J. ரமேஷ்குமார் (Club Supplies) லயன் A.P செல்வராஜன் (Seminars) செயல்பட்டார்கள். மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. விருதுநகர் ரோட்டில் ஊர் நுழைவாயிலில் பஸ் பயணிகள் நிழற்குடை ஒன்று கட்டித் தரப்பட்டது. தேக்கடிக்கு லயன்ஸ் குடும்ப இன்பச் சுற்றுலாவாக 2 நாட்கள் சுமார் 50 லயன்ஸ் குடும்பங்கள் அழைத்துச் செல்லப்பட்டு, சங்கத் தோழமை மேலும் பலப்படுத்தப்பட்டது.

2001-02ம் ஆண்டின் சங்கத்தலைவர் லயன் S. ஸ்டாலின், செயலாளர் லயன் E.A.E.T.S. செண்பகராஜன் பொருளாளர் லயன் P.D. சுதர்ஸன் ஆவார்கள். மாவட்ட ஆளுநர் லயன் H. முகம்மது அலி PMJF. மாவட்ட அமைச்சரவையில் லயன் A.S. ஆறுமுகச்சாமி மண்டலத் தலைவராகவும், மாவட்டத் தலைவர்களாக லயன் AMSG. அசோகன் (Extension), லயன் ஆர். சந்திரபிரகாஷ் (Orphanages) லயன் A.P. செல்வராஜன் (International Understanding), லயன் P. சிவசுப்பிரமணியன் (Drug Awareness) செயல்பட்டார்கள். அமைச்சரவையிலிருந்தோர் எல்லோரும் இணைந்து கொடைக்கானலில் ஒரு சிறப்பான District Seminar - ஐ பிரம்மாண்டமாக நடத்தித் தந்தார்கள். மண்டலத் தலைவர் லயன் A.S. ஆறுமுகச்சாமி சிறப்பானதொரு மண்டல மாநாட்டினை நடத்தி நம் சங்கத்தின் சிறப்பியல்புகளை வெளிக்காட்டினார்கள். லயன் M.A.P. சேர்மராஜை இதழாசிரியராகக் கொண்டு The Jewel இதழ் சிறப்பாக வெளியிடப்பட்டது. ஆண்டு முழுவதும் இடைவிடாமல் சேவைத்திட்டங்கள் நிறைவேற்றித் தரப்பட்டது. நிரந்தர திட்டமாக விஸ்வநத்தம் பஞ்சாயத்து பள்ளிக்கு ஒரு வகுப்பறை மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு வேலியும் செய்து தரப்பட்டது மற்றும் ரிசர்வ்லைன் பஞ்சாயத்து பள்ளிக்கு ஆண்/பெண் கழிப்பறை மற்றும் தண்ணீர்த்தொட்டி கட்டித்தரப்பட்டு, ஆளுநரால் திறக்கப்பட்டது. ஆண்டிறுதியில் உறுப்பினர் எண்ணிக்கை 205.

2002-03ம் ஆண்டில் நம் சங்கத் தலைவராக லயன் K.A. முருகையன், செயலாளராக லயன் பிரேம்கிஷன் சார்தா, பொருளாளராக லயன் சுப்புராஜ் செயல்பட்டார்கள். மாவட்ட ஆளுநர் லயன் M.S.M.R. ஸ்ரீனிவாசகம் ஆவார்கள். அவரின் அமைச்சரவையிலே நம் சங்கத்தின் சார்பாக லயன் R. அசோக்குமார் வட்டாரத் தலைவராக பொறுப்பேற்றார்கள். மாவட்டத் தலைவர்களாக லயன் AMSG. அசோகன் (Convention) லயன் J. ரமேஷ்குமார் (Image Building) லயன் S. சேர்மத்துரை (Yogasana), லயன் P. சிவசுப்பிரமணியன் (Seminar) லயன் S. ஸ்டாலின் (Traffic Awareness) செயல்பட்டார்கள். மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவரின் துணைவியார் லயன் ராதிகா தேவி முருகையன் அவர்கள் சங்க இதழாசிரியையாகச் சிறப்பாக செயல்பட்டார்கள். நம் சங்க உறுப்பினர் லயன் S. ஸ்ரீராம் அசோக் அவர்கள் MJF விருது பெற்று சங்கத்திற்குப் பெருமை சேர்த்தார்கள். விருதுநகர் மெயின் ரோட்டில் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி முன்பாக நல்ல பார்வையுடன் கூடிய வசதி மிக்க பயணிகள் நிழற்குடை ஒன்று கட்டித் தரப்பட்டது ஓர் சிறப்பு. ஆண்டிறுதியில் உறுப்பினர் எண்ணிக்கை 205.

2003-04ம் ஆண்டில் நம் சங்கத் தலைவராக லயன் A. ஆசைத்தம்பி, செயலாளராக லயன் G. சந்திரமோகன், பொருளாளராக லயன் A.K.K. பாஸ்கரன் செயல்பட்டார்கள். சங்க இதழ் ஆசிரியையாக லயன் முருகேஸ்வரி ரவி பாராட்டும்படியாக பணியாற்றினார்கள். மாவட்ட ஆளுநராக லயன் A.P.S. ரவீந்திரன் ஆளுகை புரிந்தார்கள். அவரது அமைச்சரவையிலே மாவட்டத் தலைவர்களாக லயன் AMSG. அசோகன் (Youth Exchange) லயன் S. சேர்மத்துரை (Village Adoption), லயன் முருகையன் (Computer Education), லயன் S. ஸ்டாலின் (Fine Arts Development) ஆகியோர் செயல்பட்டார்கள். சிவகாசியிலுள்ள 4 லயன்ஸ் சங்கங்கள் + திருத்தங்கல் லயன்ஸ் சங்கத்தையும் இணைத்து பல புதிய நல்ல சேவைத் திட்டங்களுக்கு அடித்தளமிட்டார்கள். இந்த ஐந்து லயன்ஸ் சங்கங்களைச் சேர்த்து வைத்து நம் லயன்ஸ் பள்ளியில் வைத்து சிறப்பானதொரு முன்னாள் ஆளுநர் மாத கொண்டாட்டத்தை நடத்திக் காட்டினார்கள். நம் லயன்ஸ் பள்ளியில் மழை நீர் சேமிப்புக்காக அதிகப் பணச் செலவில் பல ஏற்பாடுகளைச் செய்து தந்தார்கள். ஆண்டு இறுதி உறுப்பினர் எண்ணிக்கை 188.

2004-2005 ஆண்டின் தலைவர் லயன் S. ராமர், செயலாளர் லயன் A.A. மகேசன் பொருளாளர் லயன் T. சிவபாலன் ஆவார்கள். சங்க இதழ் ஆசிரியையாக லயன் சுதா சாரதா அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மாவட்ட ஆளுநர் லயன் M.B. சந்திரன் ராஜா. அவரின் அமைச்சரவையிலே வட்டாரத் தலைவராக நம் சங்கத்தைச் சார்ந்த லயன் S. சேர்மத்துரை அவர்கள் வத்றாப், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஊர்களில் வட்டாரக் கூட்டத்தை நடத்தினார்கள். மாவட்ட அமைச்சரவையில் நம் சங்க லயன்ஸ்கள் லயன் அ. ஆசைத்தம்பி (Guidance to Club Presidents), லயன் G. அசோகன் (Large Scale Industries), லயன் J. ரமேஷ்குமார் (Village Schools) லயன் A.P. செல்வராஜன் (Campus Clubs) செயல்பட்டார்கள். சேவைத்திட்ட முதன்மையாக காக்கா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஒன்றையும், உடல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் சுமார் 4 லட்சம் மதிப்பில் சிவகாசியில் உள்ள மற்ற லயன் சங்கங்களோடும், திருத்தங்கல் லயன் சங்கத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. சாட்சியாபுரம் பள்ளிக்கு சைக்கிள் ஷெட் கட்டித் தரப்பட்டது. சாதனைகளின் சிகரமாக சிவகாசி - விருதுநகர் மெயின் ரோட்டில் ஆனைக்குட்டம் கிராமத்தில் நம் சங்கத்திற்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நம் லயன்ஸ் பள்ளிக்கு விரிவாக்கத் திட்டமாக உறைவிடப்பள்ளி என்ற உயரிய நோக்கத்தில் பிரம்மாண்டமான புதிய இரண்டுமாடி விசாலமான கட்டிடம், ஆண் மாணாக்கர்களுக்கு ஓர் புதிய ஹாஸ்டல், பெண் மாணவச் செல்வங்களுக்கு ஓர் புதிய ஹாஸ்டல் என புதிய வளாகம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படை - முதுகெலும்பு - உயிர்மூச்சு நம் மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன் ஏ. வைரப்பிரகாசம் MJF ஆவார்கள். நம் லயன் பள்ளியின் வரலாற்றில் இது ஓர் பொன்னான திட்டம். சிவகாசி நகரை என்றென்றைக்கும் போற்றிப் பாராட்டக் கூடிய உன்னதத் திட்டம். பள்ளியின் தாளாளர் லயன் ஜே. ரமேஷ்குமாரும் இத்திட்டத்தில் தன் பங்கினைச் சிறப்பாகத் தந்துள்ளார்கள். ஆண்டு இறுதியில் சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை 188. மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. சங்கத் தோழமையைப் பெருக்கிட டிசம்பர் 2004ல் குடும்ப இன்பச் சுற்றுலாவாக சுமார் 50 லயன் குடும்பங்கள் கொடைக்கானல் சென்று மகிழ்ந்து வந்தோம்.

2005-06 ஆண்டின் நம் சங்கத் தலைவராக லயன் S. வித்யாதரன், செயலாளராக லயன் T. சிவபாலன், பொருளாளராக லயன் K. பரமானந்தம் சேவைகளாற்றினார்கள். மாவட்ட ஆளுநர் லயன் S.K.S.C அருணாச்சலம் அவர்களின் அமைச்சரவையில் நம் சங்கத்து அனுபவ லயன்ஸ்கள் லயன் S. ராமர் வட்டாரத் தலைவராகவும், மாவட்டத் தலைவர்களாக லயன் M. ராமமூர்த்தி (Activities) லயன் S. ஸ்டாலின் (Fund Raising) லயன் A.C கனகசபை (Weak Clubs) லயன் G. அசோகன் (MJF - MEET) நன்கு செயலாற்றினார்கள். இந்த லயன் ஆண்டின் மற்றுமொரு சிறப்பு - ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டிய ஆண்டு - ஆம் - பன்னாட்டு லயன்ஸ் இயக்கத் தலைவராக இரண்டாவது இந்தியராக லயன் அசோக் மேத்தா அவர்கள் தலைமையேற்றார்கள். மற்றுமோர் சிறப்பு இந்த லயன்ஸ் ஆண்டிற்கு Golden Jubilee Year In India. இந்த கொண்டாட்டத்திற்கு பன்னாட்டு இயக்கத் தலைவர் லயன் அசோக் மேத்தா நம் மாவட்ட நிகழ்ச்சிகளின் தலைமை விருந்தினராக 28-01-2006 அன்று திருநெல்வேலிக்கு வருகை புரிந்தார்கள். அன்று நடைபெற்ற மிகப்பெரிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியில் நம் சங்கத்தின் சார்பாக நம் சங்கத்தில் 9 புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம். பன்னாட்டு இயக்கத் தலைவரிடம் நம் சங்கம் சார்பாக CSF-II விற்கு நன்கொடைகள் தந்தோம். இந்த லயன்ஸ் ஆண்டில் நம் சங்கப் பொறுப்பாளர்களால் ரத்ததானத்திற்கும், கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. கண்தானம் 4 ஜோடிகள் பெறப்பட்டது. 42 பேருக்கு கண்ணுக்கு கேடராக்ட் ஆபரேஷன் செய்து தரப்பட்டுள்ளது. 7 ரத்ததான முகாம்கள் மூலமாக சுமார் 800 யூனிட்டுகள் ரத்தம் பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 1185 மரம் நட்டு இதிலும் சாதனை உருவாக்கப்பட்டுள்ளது. நமது லயன்ஸ் புதிய பள்ளி வளாகத்தில் “Meeting Hall” ரூ.20 லட்சம் செலவில் கட்டித் தரப்பட்டு ஆளுநர் லயன் SKSC. அருணாச்சலம் அவர்களால் 12-3-2006 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. லயன் உஷா குமாரவேல் அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு சங்க இதழ் “The Jewel” மிகமிகச் சிறப்பாக 13 இதழ்கள் (11th Special Issue) ஆக வெளியிடப்பட்டது. 31-3-2006 அன்று நம் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 188.

2006-2007 லயன்ஸ் ஆண்டு நம் சங்கத்தலைவர் லயன் EAETS. செண்பகராஜன் செயலாளர் லயன் S.N.N. சிவபிரான், பொருளாளர் லயன் S.P.R. பிரபு. உறுப்பினர் எண்ணிக்கை 186. மாவட்ட ஆளுநர் சிவகாசி இண்டஸ்டிரியல் டவுண் லயன்ஸ் சங்கத்தின் லயன் S. சுரேந்திரன் MJF ஆவார். லயன் A.M.S.G. ராமமூர்த்தி அவர்கள் வட்டாரத் தலைவராகவும், லயன் A.M.S.G. அசோகன் மாவட்டத்தலைவர் Leader Ship, லயன் S. வித்தியாதரன் மாவட்டத்தலைவர் - Blood Donation லயன் R. அசோக்குமார் மாவட்டத்தலைவர் - Tele communication, லயன் S. ராமர், மாவட்டத்தலைவர் - District News Letter என 5 லயன்ஸ்கள் மாவட்ட அமைச்சரவையில் இடம் பெற்றனர். மாவட்ட துணை ஆளுநர் லயன் T. தியாகராஜன் MJF. “The Jewel” மாத இதழ் லயன் A. ரவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு 10 இதழ் வெளியிடப்பட்டது. 5 புதிய உறுப்பினர்கள் நம் லயன்ஸ் சங்கத்தில் இணைந்துள்ளனர். 10 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டது. World Health Day அன்னை சாரதா ஆஸ்ரமம் குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. நமது லயன்ஸ் உறைவிடப்பள்ளியில் சாப்பாடு அறை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது. காகா சண்முக நாடார் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ரத்ததான முகாம் நடைபெற்றது. இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மூன்று சக்கர வாகனம் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை இருதய நோயாளிகளிக்கு Rs. 4000/- மதிப்பில் மருந்துகள், அரசு மருத்துவமனைக்கு மெத்தைகள், காகா கண்மருத்துவமனைக்கு GLUCO meter, Paper அன்பு இல்லத்திற்கு Steel rack அங்குள்ள முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மனநலம் குன்றிய மாணவ மாணவியர் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மற்றும் இலவச தையல் மிஷின், மாவு அரைக்கும் இயந்திரம், அரிசி என எண்ணற்ற சேவைகள் செய்யப்பட்டது. மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது.

2007-2008 லயன்ஸ் ஆண்டு நம் சங்க தலைவர் A.A. மகேசன், செயலாளர் லயன் A.K.K. பாஸ்கரன், பொருளாளர் லயன் A. சரவணக்குமார். உறுப்பினர் எண்ணிக்கை 188. மாவட்ட ஆளுநர் லயன் T. தியாகராஜன் MJF, விருதுநகர் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர். துணை ஆளுநராக லயன் T. சுயம்புராஜன் செயலாற்றினார். லயன் G. ராமமூர்த்தி, லயன் S. ராமர், லயன் EAETS. செண்பகராஜன் ஆகிய 3 மாவட்டத் தலைவர்கள் மாவட்ட அமைச்சரவையில் நம் சங்கத்தின் சார்பில் பணியாற்றினார்கள். ‘The Jewel’ மாத இதழ் லயன் அருணா சுதர்சன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 11 இதழ்கள் வெளியிடப்பட்டன. 2 புதிய உறுப்பினர்கள் இணைக்கப் பெற்றனர். ரத்ததான முகாம் 7 கல்லூரிகளில் நடத்தப்பட்டது. கண் சிகிச்சை முகாம் காகா சண்முக நாடார் கண்மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இலவச மருத்துவ முகாம் இரண்டு சிவகாசி Doctors Association னுடன் இணைந்து நடத்தப்பட்டது. மேலும் மருத்துவ உதவி, கல்வி உதவி என பல சேவைகள் சிறப்பாக நடைபெற்றன. திருத்தங்கல் லயன்ஸ் சங்கம் மற்றும் சிவகாசியிலுள்ள லயன்ஸ் சங்கங்களுடன் இணைந்து Peace Poster Contest நடத்தப்பட்டது. கண்தானம் பெறப்பட்டு உரியவர்க்கு வழங்கப்பட்டது. கண் குறைபாடு அறியும் முகாம் காகா சண்முக நாடார் கண் மருத்துவமனையுடன் இணைந்து 3 பள்ளிகளில் நடத்தப்பட்டது. இலவசமாக கண்கண்ணாடிகள் ஏழை மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது. நம் உறைவிடப்பள்ளிக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய உணவு அறை கட்டி மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மாவட்டத்திட்டங்கள் பன்னாட்டுத் திட்டங்கள் யாவும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளில் முதன்மையாக தேர்வு பெற்ற மாணவ மாணவியர்கள் கௌரவிக்கப்பட்டனர். திருத்தங்கல் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து Primary Health centre க்கு நோயாளிகள் காத்திருக்கும் அறை ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது. உலக ஊனமுற்றோர் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட மாநாடு விருதுநகரில் நடைபெற்றது.

லயன்ஸ் ஆண்டு 2008-2009ல் நம் சங்கத் தலைவர் லயன் S.N.N. சிவபிரான், செயலாளர் லயன் S.P.R. பிரபு, பொருளாளர் லயன் K. பிரபாகர். உறுப்பினர் எண்ணிக்கை 202. மாவட்ட ஆளுநர் லயன் T. சுயம்புராஜன் MJF அவர்கள். துணை ஆளுநர் லயன் M. சுப்பையா அவர்கள். வட்டாரத்தலைவராக லயன் S. வித்யாதரன் அவர்களும் மாவட்டத்தலைவர்களாக லயன் A.A. மகேசன் மற்றும் லயன் EAETS. செண்பகராஜன், லயன் S. ஸ்டாலின் அவர்களும் மாவட்ட அமைச்சரவையில் பணியாற்றினர். “The Jewel” மாத இதழ் லயன் கோதை செந்தில்வேலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 12 இதழ்கள் வெளிவந்தது. Multiple District -ல் சிறந்த இதழுக்கான விருது பெற்றது. 19 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். மாவட்ட திட்டமான கல்விக்கு முதலிடம், இளஞ்சிரார் பார்வை பாதுகாப்பு, பசுமை புரட்சி, உயிர்காக்க ரத்ததானம், கண்தானம், சுயவேலைவாய்ப்பு, முதியோர் நலம், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு என பல சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது.

2009-10 ஆம் ஆண்டு தலைவராக லயன் T. சிவபாலன், செயலாளராக லயன் K. பரமானந்தம், பொருளாளராக லயன் A. நாகராஜன் ஆகியோர் செயல்பட்டனர். லயன் EAETS. செண்பகராஜன், லயன் A.A. மகேசன், லயன் S.N.N. சிவபிரான் ஆகியோர் மாவட்ட தலைவர்களாக மாவட்ட அமைச்சரவையில் பணி ஆற்றினர். மாவட்ட ஆளுநராக லயன் M. சுப்பையாவும், அவர் மறைவுக்குப்பின் லயன் K. கந்தசாமியும் பணி ஆற்றினார்கள். உறுப்பினர் எண்ணிக்கை 208.

நமது புதிய லயன்ஸ் பள்ளி வளாகத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பில் புதிய A/C கம்ப்யூட்டர் ஹால், புதிய A/C லைப்ரேரி ஹால் மற்றும் ஏழு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு நம் லயன்ஸ் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்காக “Best Permanent Project of the Year Award” - Multiple District- ல் இருந்து கிடைக்கப்பெற்றது.

காளீஸ்வரி கல்லூரியில் 20 கல்லூரி மாணவிகளைக் கொண்டு புதிய “Leo Club” தொடங்கப்பட்டது. “Best Leo Club” Award வென்று சாதனை படைத்தனர்.

Bulletin Editor லயன் வத்சலா தனசேகரன் 12 இதழ்கள் வெளியிட்டு Best Bulletin Award, District மற்றும் Multiple ல் இருந்து கிடைக்கப் பெற்றார்.

லயன்ஸ் ஆண்டு 2010-2011ல் நம் சங்கத்தலைவர் லயன் A. குருமோகன், செயலாளர் லயன் K. பிரபாகர், பொருளாளர் லயன் S. குமாரவேல்கனி ஆகும். உறுப்பினர் எண்ணிக்கை 208. மாவட்ட ஆளுநர் தூத்துக்குடி லயன் P.O.P. ராமசாமி PMJF. அவருடன் பாளையங்கோட்டை லயன் K.S. மணி அவர்களும் குலசேகரம் லயன் MJF ஏசுபாலன் அவர்களும் துணை ஆளுநராக பணியாற்றினர். வட்டாரத்தலைவர் லயன் A. ஆசைத்தம்பி அவர்களும் லயன் G. ராமமூர்த்தி லயன் M. ராமமூர்த்தி லயன் T. சிவபாலன் மற்றும் லயன் S. வித்தியாதரன் ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். “The Jewel” மாத இதழ் லயன் பிரேமலதா பாலசுப்பிரமணியன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 11 இதழ்கள் வெளிவந்தன. மாவட்ட மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது

மூத்த லயன் KSAA. ஜெயபால் அவர்கள் திடீர் மறைவு - கண்விழி தானம் பெறப்பட்டது. பாளையங்கோட்டை லயன் சங்கம் விருதுநகர் Elite Rotary சங்கம், குலசேகரம் லயன்ஸ் சங்கம், பழனி மலைக்கோவில் லயன்ஸ் சங்கம், ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்கங்கள், மதுரை city லயன்ஸ் சங்கம் ஆகிய சங்கங்களுடன் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. சங்க வழிகாட்டி லயன் வைரபிரகாசம் - மீரா வைரப்பிரகாசம் தம்பதியரின் 50 ஆண்டு பொன்விழாவினை கொண்டாடி லயன்ஸ் தம்பதியரின் நல் ஆசிகளை பெற்று உயரடைந்தோம். Peace Poster Contest சிவகாசியின் 7 சங்கங்களின் கூட்டு முயற்சியாக நடைபெற்றது.

கல்வி உதவி, உடல் ஊனமுற்றோருக்கு உதவி மற்றும் 6 கண்தானங்கள் பெறப்பட்டன. கண்குறை கண்டுபிடிப்பு முகாம், இலவச மருத்துவ முகாம், நீரழிவு நோய் கண்டுபிடிப்பு முகாம், ரத்ததான முகாம் நடத்தப்பட்டன. அன்னை சாரதா ஆஸ்ரமத்திற்கு அரிசி வழங்கப்பட்டது. 1 நாள் உணவும் வழங்கி அங்குள்ள அனாதைகளை மகிழ்வித்தோம். கருங்கல் மெல்வின் ஜோன்ஸ் முதியோர் இல்லத்திற்கு காற்றாடி, ரொக்கம் Rs. 5000/- ம் வழங்கப்பட்டது. விருதுநகர் முதியோர் இல்லத்திற்கு பாத்திரங்கள், ஏழைகளுக்கு மிதிவண்டி, ஊன்று கோல், தையல் மிஷின் வழங்கினோம். விஸ்வநத்தம் குருகுலம் வித்தியாலயாவிற்கு 27 கால் மிதியடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. காளீஸ்வரி கல்லூரியின் இளம் லயன்ஸ் சங்கமும் பலசேவைதிட்டங்களை நிறைவேற்றியது.

Lions Quest Workshop காரனேசன் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. காரனேசன் பள்ளிக்கு Sanitary Napkin Vending Machine, அரசு மருத்துவமனையில் 27 போர்வைகள் தொழுநோயாளிக்கும், இரண்டு Needle Destroyer ம் வழங்கப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 2011-2012ல் லயன் Dr. V. கதிரவன் அவர்கள் தலைவராகவும், லயன் T.S. விவேகானந்தன் செயலாளராகவும், லயன் S. குமாரவேல்கனி பொருளாளராகவும் பொறுப்பேற்று செயல்பட்டனர். உறுப்பினர் எண்ணிக்கை 209. மாவட்ட ஆளுநர் லயன் K.S. மணி PMJF லயன் P.J.M. ஏசுபாலன் முதலாம் துணை ஆளுநராகவும், லயன் உபால்ட்ராஜ் மெக்கன்னா அவர்கள் இரண்டாம் துணை ஆளுநராகவும் செயல்பட்டனர். லயன் KSSP.A. குருமோகன் அவர்கள் வட்டாரத்தலைவராகவும், மாவட்டத் தலைவர்களாக லயன் A. ஆசைத்தம்பி - Green Revolution லயன் K.S.S.P. தனசேகரன் MJF - Uniform to School Children, லயன் S. கிருஷ்ணமூர்த்தி - Guidance to Club Presidents, லயன் M. ராமமூர்த்தி - District Youth Camp & Exchange, லயன் T. சிவபாலன் - Liaison with Chamber of Commerce, மாவட்ட அமைச்சரவையில் செயல்பட்டனர். லயன் K. சிவசங்கரி கதிரவன் “The Jewel” மாத இதழ் ஆசிரியராக 12 மாத இதழ்களை வெளியிட்டார்.

“Breast Feeding” குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 2 பள்ளிகளில் மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு அறிதல் முகாம் நடத்தப்பட்டது. அனீமியா கண்டறிதல் முகாம் 2 பள்ளிகளில் நடத்தப்பட்டது. ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மூன்று சக்கர வண்டி ஊனமுற்ற ஏழைக்கு வழங்கப்பட்டது. 6320 மரக்கன்றுகள் சிவகாசியிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் நடப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா பள்ளியில் இலவச கண் பார்வை குறைபாடு கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது. இளம் பிள்ளைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட நோய் கண்டறிதல் முகாம், ரத்ததானமுகாம் நடத்தப்பட்டது. கல்வி உதவி, மருத்தவ உதவி மற்றும் விளையாட்டு சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கண்தானம் பெறப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஏழை மாணவ மாணவிகளுக்கு சீருடை, கண் கண்ணாடி, கல்வி உதவித்தொகை என பல சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

லயன்ஸ் ஆண்டு 2012-13ல் லயன் K. பரமானந்தம் அவர்கள் தலைவராகவும், லயன் A. நாகராஜன் செயலாளராகவும், லயன் S. வாசியப்பன் பொருளாளராகவும், நியமிக்கப்பட்டனர். மாவட்ட ஆளுநராக லயன் PJM. ஏசுபாலன் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். லயன் AMSG. அசோகன் MJF, GLT Co Ordinator ஆக, மற்றும் லயன் EAETS. செண்பகராஜன் - Eradication of Children Labour. லயன் A.C. கனகசபை MJF - UNO Day, லயன் Dr. V.K. கதிரவன் - Medical Camp, லயன் P. சிவசுப்ரமணியம் - Import Export Guidance மற்றும் லயன் S. வித்தியாதரன் - Club Meeting ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். “The Jewel” சங்க இதழ் லயன் SKT சிவபாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாத இதழ்கள் வெளியிடப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து 16 வயதிற்குட்பட்டோர்களுக்கு Heart Surgery Free Camp நடத்தப்பட்டது. 220 பயனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, தலா ரூ. 90,000/--மதிப்பிலான அறுவைச் சிகிச்சை 66 பயனாளிகளுக்கு இலவசமாகச் செய்து தரப்பட்டது. நம் லயன்ஸ் பள்ளியின் ஜுனியர் வளாகத்தில், 14 லட்சம் செலவில், புதிய கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு, மாவட்ட ஆளுநரால் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 30 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டு மாவட்ட கூட்டு சங்கக்கூட்டம் கேரளா, குருவாயூரில் வைத்து நடத்தப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை 212.

லயன்ஸ் ஆண்டு 2013-14 லயன் R. ஆனந்தராஜன் அவர்கள் தலைவராகவும், லயன் T.S. விவேகானந்தன் செயலாளராகவும், லயன் R.C.P.ராஜ் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநராக லயன் உபால்டுராஜ் மெக்கன்னா அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். மாவட்ட அமைச்சரவையில் லயன் AMSG. அசோகன் MJF, GLT Co Ordinator, ஆக மறுபடி பணியாற்ற, லயன் K. பரமானந்தம் - Cardiac Care, லயன் M. ராமமூர்த்தி - Governors News Letter, லயன் KSSPA. குருமோகன் - WMMR & Activities, லயன் R. அசோக்குமார் MJF - Women Membership ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். லயன் லயன் ராதிகா தேவி முருகையன் அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு சங்க இதழ் “The Jewel” மிகச் சிறப்பாக 10 மாத இதழ்கள் ஆக வெளியிடப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை 202.

ரூ.28,000/- மதிப்பிலான கம்ப்யூட்டர் ஒன்று VSKD பெண்கள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 6 ஜோடிகள் கண்கள் தானமாகப் பெறப்பட்டது. 340 யூனிட்கள் ரத்ததானம் பெற உதவிகள் தரப்பட்டது. 324-AB கூட்டு மாவட்டத்தின் 5வது வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெற்ற பொழுது, நம் சங்கத்திலிருந்து 40 உறுப்பினர்கள் சென்று, கலந்து, தோழமை பெருக்கி, மகிழச் செய்யப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 2014-15 லயன் A. குமாரவேல் அவர்கள் தலைவராகவும், லயன் G. சுப்புராஜ் செயலாளராகவும், லயன் C. செந்தில்வேலன் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் சிவகாமி S. ஆறுமுகம் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு செயல்பட்டார்கள். மண்டலத் தலைவராக லயன் R. சந்திர பிரகாஷ் - Diamond Region, வட்டாரத்தலைவராக லயன் EAETS. செண்பகராஜன், மாவட்டத் தலைவர்களாக லயன் R. அசோக் குமார் - CEP Diamond Region லயன் S. ராமர் - Awarness of Natural Ferbilizers, லயன் R. ஆனந்தராஜன் - Human Relationship ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் செயல்பட்டனர். “The Jewel” சங்க இதழ் லயன் கோதை செந்தில் வேலன் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு 10 மாத இதழ்கள் வெளியிடப்பட்டது.

சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் 5 மாணவிகளுக்கு ரூ. 20,000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நம் லயன்ஸ் பள்ளியின் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல்நிலை பெற்றிட்ட மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கார்நேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 25,000/- மதிப்பிலான கம்ப்யூட்டர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அப்பள்ளியின் மாணவிகள் ஐவருக்கு ரூ. 10,700/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 3 ஜோடி கண்கள் தானம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. மதுரை எலைட் லயன்ஸ் சங்கத்தின் முதியோர் இல்லத்திற்கு 2 கட்டில்கள் நன்கொடை வழங்கப்பட்டது. சுமார் 300 யூனிட்கள் இரத்ததானம் பெற்று தரப்பட்டது. நம் லயன்ஸ் பள்ளியின் சீனியர் வளாகத்தில் Science Park ஒன்று உருவாக்கித்தரப்பட்டது. தூத்துக்குடி Luciya Deaf & Dumb சங்க கூட்டு கூட்டத்தில் இல்ல பயனாளிகள் இருவருக்கு ரூ. 6000/- மதிப்பிலான வீட்டு உபயோக சாமான்கள் நன்கொடையாக தரப்பட்டது. நமது பள்ளியின் சீனியர் வளாகத்தில் Principal Quarters கட்டிடத்தின் திறப்பு விழா இனிதே நடைபெற்றது. உறுப்பினர் எண்ணிக்கை 208.

லயன்ஸ் ஆண்டு 2015-16 லயன் N. கனகசபேசன் அவர்கள் தலைவராகவும், லயன் T. இம்பாலா செயலாளராகவும், லயன் G. சுரேஷ்கனி பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் SMJ. சந்திரன் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு செயல்பட்டார்கள். மாவட்டத் தலைவர்களாக லயன் A. குமாரவேல் MJF, Printing Awarness, லயன் R. அசோக் குமார் - Anti Alcoholism, லயன் S. வித்தியாதரன் - Water Conservation, லயன் A.A மகேசன், Club Election, லயன் EAETS. செண்பகராஜன் - Secretary Forum ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் பணியாற்றினார்கள். லயன் லயன் திலகேஸ்வரி ராஜு அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு சங்க இதழ் “The Jewel” மிகச் சிறப்பாக 10 மாத இதழ்கள் ஆக வெளியிடப்பட்டது.

மரக்கன்றுகள் நட்டது; ஜீவக்கல் அனாதை இல்லம், ரெட்டியாபட்டி அரசு குழந்தைகள் காப்பகம் போன்ற இல்லங்களுக்கு நன்கொடை வழங்கியது; கண் தானங்கள்-7; இரத்த தானங்கள், கல்வி உதவித்தொகை வழங்கியது; கண் மருத்துவ முகாம் நடத்தியது; காரநேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கணினி வழங்கியது; முதியோர்களுக்கு கண் கண்ணாடி வழங்கியது. நமது சங்கம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது.

லயன்ஸ் ஆண்டு 2016-17 லயன் A. நாகராஜன் அவர்கள் தலைவராகவும், லயன் D. பிரபாகரன் செயலாளராகவும், லயன் S. செல்வராஜ் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் சுதந்திரலட்சுமி அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். மாவட்டத் தலைவர்களாக லயன் R. அசோக் குமார் - Club Guidance, லயன் M. கனகசபேசன் - Activities, லயன் EAETS. செண்பகராஜன் - Leadership Member மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். “The Jewel” சங்க இதழ் லயன் சுபத்ரா பரமானந்தம் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு 10 மாத இதழ்கள் வெளியிடப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை 210.

இந்த வருடம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நமது லயன்ஸ் சங்கத்தில் Lions Quest Programme மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு பாராட்டைப் பெற்றது. நமது சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக அழகிய பூங்கா ஒன்று நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பல கண் மருத்துவ முகாம்களும் சில கண் தானங்களும் பெறப்பட்டன. காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கணினி வழங்கப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 2017-18ல் லயன் T. இம்பாலா அவர்கள் சிவகாசி லயன்ஸ் சங்க தலைவராகவும், லயன் C.ராஜசேகரன் செயலாளராகவும், லயன் M. ராஜகோபால் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் M. சுந்தரராஜன் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். மாவட்டத் தலைவராக, லயன் S. ராமர் MJF - LCIF Member லயன் A. நாகராஜன் - Lion Quest Co-Ordinator, லயன் M. கனகசபேசன் - General Medical Camp ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் செயல்பட்டனர். லயன் சங்கரி பாலா அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு சங்க இதழ் “The Jewel” மிகச் சிறப்பாக 12 மாத இதழ்கள் ஆக வெளியிடப்பட்டது.

இரண்டு குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு செய்யப்பட்டது; கம்மாபட்டி என்ற மலைவாழ் ஊர் தத்தெடுக்கப்பட்டு அங்குள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சுகாதார வசதிகளும், கல்வி வசதிகளும் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு முறை வந்து இலவசமாக அனைத்து மருத்துவ சோதனைகளும் செய்யப்பட்டு அவர்களுக்கு அன்று இலவச சாப்பாடு கொடுக்கப்பட்டது. மற்றும் இலவச பொது மருத்துவம், சர்க்கரை நோய் விழிப்புணர்வு, கண் மருத்துவ முகாம், பல் மருத்துவ முகாம் போன்ற பல முகாம்கள் நடத்தப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை 211.

லயன்ஸ் ஆண்டு 2018-19ல் லயன் C. ராஜசேகரன் அவர்கள் சிவகாசி லயன்ஸ் சங்க தலைவராகவும், லயன் J. விக்னேஷ் செயலாளராகவும், லயன் N. மகேஷ்வரன் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் K.G. பிரகாஷ் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். வட்டாரத்தலைவராக லயன் N. கனகசபேசன், மாவட்ட GLT இணைப்பாளராக லயன் AMSG. அசோகன் MJF, மாவட்டத் தலைவர்களாக லயன் T. இம்பலா - Parliamentary Procedures, லயன் A. நாகராஜன் - Lion Quest Co-Ordinator, லயன் S. ராமர் MJF, - M.R. Vaccinations, லயன் S.N. சிவபிரான் - Seminars & Worship, லயன் EAETS செண்பகராஜன் - Club Consititutions & Bye - Laws ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். “The Jewel” சங்க இதழ் லயன் பவானி சுதிர் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு 10 மாத இதழ்கள் வெளியிடப்பட்டது. சங்க உறுப்பினர் எண்ணிக்கை 212.

ரூ. 1,25,000/- மதிப்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பூங்கா அமைத்துக் கொடுக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. கேரளா புயல்ன் போது முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ. 2,40,000/-- காசோலை அனுப்பப்பட்டது. அரிசி மூடைகள், மதிய உணவு வழங்குதல், கல்வி உதவித் தொகை, மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள், மரக்கன்றுகள் நட்டல், இரத்ததான முகாம் என்று லயன்ஸ் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு ஒரு சேவை என்ற வீதம் பல சேவைகள் செய்யப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 2019-20ல் லயன் M. ராஜகோபால் அவர்கள் தலைவராகவும், லயன் வாசியப்பன் செயலாளராகவும், லயன் P. வினோத் கண்ணா பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் J.K.R. முருகன் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். வட்டாரத்தலைவராக லயன் S.N. சிவபிரான் அவர்கள் , மாவட்ட GST இணைப்பாளராக லயன் AMSG. அசோகன் MJF அவர்கள், மாவட்டத் தலைவர்களாக N. கனகசபேசன் - DC for MJF, லயன் C. ராஜசேகரன் - Club Bulletin, லயன் S. ராமர் MJF, - Leo Clubs, லயன் A.A. மகேசன் - Club Building ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் செயல்பட்டனர். லயன் இந்திரா ஜெயந்தி அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு சங்க இதழ் “The Jewel” மிகச் சிறப்பாக 10 மாத இதழ்கள் ஆக வெளியிடப்பட்டது. சங்க உறுப்பினர் எண்ணிக்கை 210.

மரக்கன்றுகள் நட்டப்பட்டது. இரத்ததானமுகாம், கல்வி உதவித்தொகை, மருத்துவ முகாம், தையல் இயந்திரம்-2, மதிய உணவு வழங்குதல், அரிசி மூடைகள், ரூ.36,000/- மதிப்பில் தீபாவளி புத்தாடைகள், பொது மருத்துவ முகாம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மிதிவண்டி வழங்குதல், கண்தான முகாம் ரூ.11,570 மதிப்பில் பள்ளிச்சீருடைகள் என்று பற்பல சேவைகள் செய்யப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 2020-21ல் லயன் D. பிரபாகரன் அவர்கள் தலைவராகவும், லயன் S. செல்வராஜ் செயலாளராகவும், லயன் C. சிவசக்தி பாலன் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் Er. P. J. ஜஸ்டின் பால் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். மாவட்டத் தலைவர்களாக லயன் AMSG. அசோகன் MJF - Campaign 100, லயன் R. அசோக் குமார் - Lions Business Mens Forum, லயன் S. ராமர் MJF - Mega Services, லயன் M. ராஜகோபால் - Inter Club Meeting ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். “The Jewel” சங்க இதழ் லயன் ஜெயா நாகராஜன் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு 11 மாத இதழ்கள் வெளியிடப்பட்டது.

கொரோனா காலத்தில் சுமார் ரூ. 60 லட்சம் செலவில் சிவகாசி ESI மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியது. அதற்காக ISAME FORUM, அங்கீகாரம் சிவகாசி லயன்ஸ் சங்கத்திற்கு கிடைத்தது. 2 MJF Contribution LCIF; World Lions Service Day அன்று 60 சேவைத் திட்டங்கள் நிறைவேற்றியது; லயன்ஸ் பள்ளியில் ரூ. 40 லட்சம் செலவில் ATAL TINKERING LAB துவங்கப்பட்டது. ரூ. 65 லட்சம் செலவில் Sewage Water Treatment, Storage Pond & Miyawaki, Micro Forest போன்ற சேவைத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. Mega Nutri Awareness Camp, ஒரு மாத காலத்திற்கு நடத்தப்பட்டது; Mega Medical Camp, Blood Camp, Wellness Webinar Camp நடத்தப்பட்டது. சங்க உறுப்பினர் எண்ணிக்கை 220.

லயன்ஸ் ஆண்டு 2021-22ல் லயன் P. வினோத் கண்ணா அவர்கள் தலைவராகவும், லயன் S. சுதிர் செயலாளராகவும், லயன் P. நித்யபாண்டி பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் V. ஜெகநாதன் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு செயல்பட்டார்கள். மண்டலத் தலைவராக லயன் EAETS. செண்பகராஜன் - Shenbagam Region, மாவட்டத் தலைவர்களாக லயன் AMSG. அசோகன் MJF - Seminar/Awards, லயன் R. அசோக் குமார் MJF - Interclub Meeting, லயன் A.A. மகேசன் - Club Bulletin, லயன் A. நாகராஜன் - LCIF Week, லயன் D. பிரபாகரன் - Membership Growth & Projects, லயன் S.N. சிவபிரான்- My Lion Service Reporting, ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். லயன் S. பவானி அவர்களை இதழாசிரியையாகக் கொண்டு சங்க இதழ் “The Jewel” மிகச் சிறப்பாக 10 மாத இதழ்கள் ஆக வெளியிடப்பட்டது. 2021ம் வருடம் 60 வருட வைரவிழா ஆண்டு கண்டு, 61 வருடத்தில் Souvenir வெளியிடப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை 215.

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ICU Ward (Intensive Care Unit) ரூ. 25.00 லட்சம் மதிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 21 கிராம, நகர ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. பர்மா நூலகம் மற்றும் காலனியை தத்தெடுத்து அனைத்து மருத்துவ வசதியும், கிராம பள்ளி கட்டிடத்தை 5.00 லட்சம் மதிப்பில் சீரமைத்தும், கட்டிடத்தில் தையல் பயிற்சி மையம் அமைத்து பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 55 வருடங்களாக பஸ் வசதி இல்லாத கிராமத்தில் பள்ளி குழந்தைகள் பள்ளி சென்று வர பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 7 லட்சம் மதிப்பில் லயன்ஸ் மியாவாக்கி அதர்வனக் காடுகள் சிவகாசி லயன்ஸ் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்டது. செண்பகம் மண்டல மாநாடு மாவட்டமே வியக்கும் வண்ணம் நடத்தப்பட்டது. பன்னாட்டு சேவைகளான HOPES யில் அனைத்தையும் செய்து கொடுக்கப்பட்டது. 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைப்பயணம், தாய்ப்பால் வார விழா Marathon ஓட்டம் நடத்தப்பட்டது.

லயன்ஸ் ஆண்டு 2022-23ல் லயன் S. வாசியப்பன் அவர்கள் தலைவராகவும், லயன் A.M. குணசேகரன் செயலாளராகவும், லயன் பிரேம் கிஷன் சார்தா பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆளுநர் லயன் Dr. N.K.விஸ்வநாதன் அவர்கள் பொறுப்பேற்று அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். வட்டாரத்தலைவராக லயன் D. பிரபாகரன், மாவட்ட Training Programme இணைப்பாளராக லயன் S.N. சிவபிரான், மாவட்டத் தலைவர்களாக லயன் R. அசோக் குமார் MJF - Lions Shares Program Chairperson, லயன் M. கனகசபேசன் - Past President Month Chairperson, லயன் A. நாகராஜன் - LCIF Chairperson, லயன் C. ராஜசேகரன் - Member Satisfactions & Orientation Chairperson, லயன் P. சிவசுப்பிரமணியன் - Environment Chairperson, லயன் EAETS. செண்பகராஜன், மண்டலத்தலைவர் GAV Chairperson ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் செயல்பட்டனர். உறுப்பினர் எண்ணிக்கை 222.

சங்க 62-ம் வருடத்தில் ஆளுநரின் பசிக்கு உணவு‘திட்டத்தை நிறைவேற்றி தினமும் 10 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஜீவக்கல் அனாதை மற்றும் முதியோர் இல்லம், சிபியோ அனாதை குழந்தைகள் காப்பகம் மற்றும் வள்ளலார் பசிப் புரட்சி இயக்கத்திற்கு மாதம் தோறும் மளிகை சாமான்கள் மற்றும் தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொடுத்தனர். மரக்கன்று நடுதல், சக்கரை நோய் கண்டறிதல் மற்றும் பல்நோக்கு மருத்துவ முகாம் விளாம்பட்டி, எடிசன் நாடார் பள்ளியில் நடத்தினர். நிரந்தரத் திட்டமாக நமது லயன்ஸ் பள்ளியில் மாண்டிசோரி ஆய்வகம், கணினி ஆய்வகம், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தனர். பள்ளிக்கு 6 ஏக்கர் 9 சென்ட் இடம் வாங்கப்பட்டு. CBSE பள்ளி துவங்க பூமி பூஜை செய்யப்பட்டது. விருதுநகர் சிறைச்சாலையில் உள்ள நூலகத்திற்கு Rs. 2,00,000/- மதிப்பில் புத்தகம் லயன் A. வைரபிரகாசம் லயன் மீரா வைரபிரகாசம்- அவர்களின் அன்பளிப்பால் வழங்கப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

'The Jewel' இதழின் ஆசிரியையாக லயன் கருணைமணி இன்பசாகரன் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி, அவர்களால் பத்து இதழ்கள் வெளியிடப்பட்டது. ஆளுநர், முதலாம் துணைநிலை ஆளுநர், இரண்டாம் துணைநிலை ஆளுநர், மண்டலத் தலைவர், வட்டாரத் தலைவர் ஆகியோர் மூலம் இதழ்களை வெளியிட்டது சிறப்பு மிக்க நிகழ்வாக இருந்தது.

லயன்ஸ் ஆண்டு 2023-24ல் லயன் KPK. பிரபாகரன் அவர்கள் தலைவராகவும், லயன் P. நித்தியபாண்டி செயலாளராகவும், லயன் P. சுதாகரன் பொருளாளராகவும் பதவி ஏற்றுள்ளனர். மாவட்ட ஆளுநராக லயன் பிரான்ஸிஸ் ரவி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். மாவட்ட அமைச்சரவையில் லயன் D. பிரபாகரன் DC Guidance, லயன் EAETS. செண்பகராஜன் மற்றும் லயன் வாசியப்பன் ஆகியோர் மாவட்ட அமைச்சரவையில் பங்கேற்று உள்ளனர். 'The Jewel' இதழின் ஆசிரியையாக லயன் தீபலட்சுமி சுதாகரன் பொறுப்பேற்றுளார். உறுப்பினர் எண்ணிக்கை 223.

28 பட்டய உறுப்பினர்களை கொண்டு துவக்கப்பட்ட சிவகாசி அரிமா சங்கம் ஆலமரமாய் வளர்ந்து மாவட்டத்திலேயே உறுப்பினர் எண்ணிக்கையிலும் சங்க திட்டங்களாலும் முதன்மை சங்கமாக திகழ்கின்றது. இரண்டு பெருமை மிகு முன்னாள் ஆளுநர்கள், 97 லயன்ஸ் மகளிர்கள் உள்ளிட்ட 223 லயன்ஸ் உறுப்பினர்கள், மாவட்ட அளவில் சிறந்த லயன்ஸ் பள்ளி நிரந்தர திட்டம், 324-A மாவட்டத்தின் மிகவும் சிறந்த சங்கங்களில் ஒன்றாக சேவையிலும் சிறந்து சமுதாயப் பணி என சிவகாசி லயன்ஸ் சங்கம் திகழ்கிறது.




Our Services

We meet on every II & IV Wednesday at Sivakasi Lions Junior School, Palaniandavarpuram Colony, Sivakasi